சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முத்துசாமி "ஸ்பாட்டுக்கே" போயிட்டாரே.. இன்னும் இளங்கோவனே வரல.. அதுக்குள்ளே "சர்ப்ரைஸ்".. ஸ்பீடு திமுக

அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டத்துக்கு சர்ப்ரைஸ் தகவல் ஒன்றை சொல்லி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலுக்கு, திமுக கூட்டணி தயாராகி வரும் நிலையில், அந்த தொகுதி மக்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்றை தந்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.. இதையடுத்து, அரசியல் கட்சிகளின் கவனம் ஈரோடு கிழக்கில் குவிந்து வருகிறது.

ஈரோடு இடைத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி கொண்டிருக்கின்றன.. கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜகவும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.

ஆனால், பாஜக இன்னும் எந்த முடிவையும் சொல்லவில்லை.. பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருவோம் என்று ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.

ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு..காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்த கமல்ஹாசன்ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு..காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்த கமல்ஹாசன்

அதிருப்தி

அதிருப்தி

ஆனால், அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேசமயம் ஒருங்கிணைந்த அதிமுக சாத்தியமாகுமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.. ஆனால், அதிமுகவில் நடக்கும் குளறுபடிகளை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.. அந்தவகையில் திமுக கூட்டணி பெருத்த நம்பிக்கையுடன் உள்ளது.. பொதுவாகவே இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்பது வழக்கமான ஒன்றுன்.. ஆனாலும், திமுக அரசு இந்த ஒன்றரை வருட காலத்திலேயே பரவலாக அதிருப்திகளை பெற்று வருகிறது.

 சீமான் பொளேர்

சீமான் பொளேர்

தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றாமல், குறிப்பாக மகளிருக்கான உரிமைத்தொகை, கரண்ட் பில் உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி நேரடியாக களமிறங்கி, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் அதாவது, எடப்பாடி தரப்பு + நாம் தமிழர் + அமமுக + போன்றவை யோசித்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான், திமுக கூட்டணியின் பிரச்சாரம் வேகம் எடுத்துள்ளது.. கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயமும் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. அதனால், திமுகவும் கூடுதலாக அக்கறையை இந்த தொகுதியில் காட்டி வருகிறது.

 முத்துசாமி நச்

முத்துசாமி நச்

அந்தவகையில், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமியின் பிரச்சாரமும் வேகம் எடுத்துள்ளது.. காரணம், முத்துசாமிக்கு இது சொந்த மாவட்டம் என்பதால் தொகுதியிலேயே முகாமிட்டு இருக்கிறாராம்.. இந்த 4 நாட்களாகவே, வீரப்பன்சத்திரம், பெரியார் நகர், மரப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.. 5வது நாளான நேற்றுகூட, ராஜாஜிபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.முத்துசாமி சொன்னதாவது

 பூரிப்பு மகிழ்ச்சி

பூரிப்பு மகிழ்ச்சி

இடைத்தேர்தலுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.. இப்போது வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறோம். முதல்நாளில் நாங்கள் மட்டும் சென்றோம். இப்போது கூட்டணி கட்சி தலைவர்களும் எங்களுடன் இணைந்து கொண்டனர். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை சென்றிருக்கிறார். அவர் வருவதற்கு இன்னும் 2 நாட்கள் ஆகும்.. அவர் வந்ததுமே இங்குள்ள 33 வார்டுகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார். அவருடைய சார்பாக சஞ்சய் சம்பத், காங்கிரஸ் நிர்வாகிகளும் வாக்கு சேகரிக்க வந்துள்ளனர்... இளங்கோவன் விரைவாக வந்து எங்களுடன் இணைந்து கொள்வார் என்றாலும், நாங்கள் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கியதற்கு காரணம், எங்கள் தோழர்கள் தான்.

 டபுள் ஸ்ட்டிராங்

டபுள் ஸ்ட்டிராங்

கட்சி நிர்வாகிகள் வந்து உடனடியாக பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.. அந்த அளவிற்கு எங்கள் கட்சி வலுவாக இருக்கிறது... கூட்டணி வலுவாக உள்ளது. முதல் நாள் கூட்டத்திலேயே 5 ஆயிரம் பேர் வருகிறார்கள் என்கிறால், அது வலுவில்லாத நிலையை காட்டுகிறதா என்ன? எதிர்க்கட்சிகள் ஆயிரம் விமர்சனம் செய்யும்.. எங்களை பொறுத்தவரை இன்னும் இரண்டு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என்றே நினைக்கிறோம்.. அந்த அளவிற்கு எங்கள் கட்சி வலுவாக இருக்கிறது.

 நிமிரும் கொங்கு

நிமிரும் கொங்கு

ஈரோடு மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகளுக்காக 450 கோடி ரூபாய் நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு அவைகள் வந்து சேரும். உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்... நகரின் மையப் பகுதியில் உள்ள சரக்கு குடோன் மற்றும் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேசி நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.. கொங்கு பகுதிக்குதான், திமுக அரசு நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளது என்று பலமுறை சொல்லி வருகிறார்.. அந்தவகையில், அமைச்சர் முத்துசாமியும் இந்த நிதிஒதுக்கீடு பற்றி தெரிவித்துள்ளது, தொகுதி மக்களை கவனிக்க வைத்து வருகிறது...!!!

English summary
Good news by Muthusamy and says DMK alliance will win with double the number of votes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X