பென்சன் ஓய்வூதியம் குட் நியூஸ் வருதா? 2026ல் இனிப்பு செய்தி தரப்போகும் முதல்வர்! ஆசிரியர்கள் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. வரும் 6ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. எனினும் கடைசி நேரத்தில் அதாவது பொங்கல் சமயத்தில் எப்படியும் ஓய்வூதியம் குறித்த நல்ல செய்தியை தமிழக அரசு அறிவிக்கும் என்று ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.. இதற்காக காலவரையற்ற போராட்டத்தையும் அறிவித்துள்ளன.

Pension Tamil Nadu Government Government Employees

3 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இதைத் தொடர்ந்து தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் டிசம்பர் 22 ஆசிரியர் சங்கங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. எனினும் இதுகுறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

இதை அடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பு, ஜனவரி 6 முதல் காலவரையறை இல்லாத போராட்டம் தொடங்கும் என்று மீண்டும் அறிவித்தது..

உடனே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, முதல்வர் அரசு ஊழியர்களைக் கைவிட மாட்டார். நாம் கொடுக்கும் 1 ரூபாயில் மத்திய அரசு, நமக்கு 29 பைசாவை திருப்பி தருகிறது.

ஓய்வூதியம் - பென்ஷன்

பீகார் மாநிலத்துக்கு ஏழே முக்கால் ரூபாய் தருகிறது. எது எப்படி இருந்தாலும், முதல்வர் அரசு ஊழியர்களைக் கைவிட மாட்டார். ஜனவரி 6ஆம் தேதிக்குள் கட்டாயம் நல்ல செய்தி வரும்'' என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தற்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்துள்ளது.. இந்த கூட்டத்தை மாநில தலைவர் கு. தியாகராஜன் தலைமையிலாக நடத்தினார். மாநிலச் செயலாளர் அருள்குமார் முன்னிலையாற்றினார்.

புத்தாண்டுக்கு இனிப்பு செய்தி

இந்த கூட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்கள் இவைதான்:

"6.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 21 ஆண்டுகால ஏக்கத்தைப் போக்கும் வகையில், ''2026 புத்தாண்டு தொடங்கும் போது ஓய்வூதியம் குறித்த ஒரு நல்ல செய்தியை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு நிர்வாகிகள் கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

சிபிஎஸ் திட்டம் ரத்து

இந்த அரசு அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து, பலமுறை தற்போது அமைக்கப்பட்ட இதே அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாடு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, கடந்த அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை மொத்தமாக தொகுத்து ஒரே தவணையில் வழங்கியதும், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட சலுகைகளை நிதிப்பலன்களை மீண்டும் வழங்கியதுடன், கடந்த ஆட்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறைகளைத் தனித்தனி அலகுகளாக பிரித்து நிர்வாகத்தைச் சீரமைத்திட காரணமாக இருந்தது.

சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பினை தமிழ்நாடு முதல்வர் விரைவில் அறிவிப்பார்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+