டிரைவரின் அலட்சியம்! சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பஸ்..! படகு மூலம் மீட்கப்பட்ட பயணிகள்!
சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் அரசுப்பேருந்து ஒன்று சிக்கிக்கொண்டது. பேருந்தில் இருந்த பயணிகளை தீயணைப்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை: கனமழையால் குளம் போல தேங்கியுள்ள சுரங்கப்பாதை வெள்ளநீரில் அரசுப்பேருந்து ஒன்று சிக்கிக்கொண்டது. சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள அரசுப்பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பேருந்தை மீட்கும் பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். டிரைவரின் அலட்சியம் காரணமாகவே பேருந்து வெள்ளநீரில் சிக்கிக்கொண்டதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Recommended Video
வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோன்று சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் சென்னை முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர் போன்றவை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அசோக்நகர் 100 அடிசாலை, பி.டி.ராஜன் சாலை, காமராசர் சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, கொருக்குப்பேட்டை ஏகாம்பரம் தெரு, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை, பெரவள்ளூர், தரமணி, பெருங்குடி, ராயப்பேட்டை, ஜெமினி மேம்பாலம், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, கொரட்டூர், மந்தை வெளி, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, எம்.எம்.டி.ஏ காலணி போன்ற பகுதிகளிலும் வெள்ளநீர் ஏரி போல தேங்கியுள்ளது.

தேங்கிய மழை நீர்
மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகே உள்ள தெருக்களில் மழைநீர் குளம் தேங்கியிருப்பதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் தடுத்தி நிறுத்தி மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கப்பட்டன. மந்தைவெளி பேருந்து நிலையங்களில் மழைநீர் புகுந்த வெள்ளக்காடானது.
சூளைமேடு பகுதியில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததால் உள்ளே இருந்த ஆட்கள் வெளியில் வராமல் தவித்தனர். பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வீட்டிற்குள் மாட்டிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

மக்கள் தவிப்பு
ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள மூப்பனார் பாலம் அமைந்துள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 20 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையினால் சென்னையில் உள்ள அனைத்து தெருக்களிலும் மழைநீர் புகுந்து வெள்ளம் போல் காட்சியளிக்கின்றது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
மழை வெள்ளம் காரணமாக கே.கே.நகர் ராஜ மன்னார்சாலை, மயிலாப்பூர் டாக்டர் சிவசாமி சாலை, ஈவிஆர் சாலை, காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை, செம்பியம் ஜவஹர் நகர், பெரவள்ளூர் 70 அடி சாலை, புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு, வியாசர்பாடி முல்லை நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் திருமலைப்பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர்கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணிமஹால் பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள்திருப்பி விடப்படுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம். போன்ற பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு தடை
திருவொற்றியூர் மண்டலம் 5ல் உள்ள மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, வியாசர்பாடி நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, ஆர்பிஐ சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதைகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நேற்று பிற்பகல் முதல் மழை சற்றே ஓய்வெடுக்கவே சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் விடிய விடிய மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பேருந்து சிக்கியது
சென்னையின் பிரதான சுரங்கப்பாதையான அரங்கநாதன் சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியதால் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தி போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை போரூரிலிருந்து மந்தவெளிக்கு செல்லும் தடம் எண் 12M பேருந்து மழை காரணமாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுதியிருந்த போதும் இன்று காலை வழக்கமான பாதையான அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாக செல்ல முற்பட்டபோது சுரங்கப்பாதையின் மையப்பகுதியில் அதிகளவு நீர் தேங்கியிருந்ததால் பேருந்து சிக்கிக்கொண்டது. சென்னையின் பிரதான சுரங்கப்பாதையான அரங்கநாதன் சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியதால் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தி போக்குவரத்து நிறுத்தப்பட்திருந்தது. இந்நிலையில் இன்று காலை போரூரிலிருந்து மந்தவெளிக்கு செல்லும் தடம் எண் 12M பேருந்து மழை காரணமாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுதியிருந்த போதும் இன்று காலை வழக்கமான பாதையான அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாக செல்ல முற்பட்டபோது சுரங்கப்பாதையின் மையப்பகுதியில் அதிகளவு நீர் தேங்கியிருத்ததால் பேருந்து சிக்கிக்கொண்டது.

தீயணைப்புப்படையினர் விரைவு
இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தில் இருந்த 5 பயணிகள் உட்பட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை படகு மூலம் மீட்டனர் பின்பு பேருந்தை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தடையை மீறி பேருந்து இயக்கம்
நேற்று மாலையுடன் மழை சற்று ஓய்திருந்ததால் நீர் வடிந்து காணப்பட்டதால் பேருந்தின் ஓட்டுநர் தடுப்புகளை அகற்றி சுரங்கபாதையில் சென்றதாக கூறப்படுகிறது இது குறித்து மாநகர போக்குவரத்து அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு பேருந்தை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரங்கநாதன் சுரங்கப்பாதை
2015 ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழைநீர் பாதிப்பின் போது இதே அரங்கநாதன் சுரங்கபாதையில்தான் பேருந்து ஒன்று சிக்கிக்கொண்டது அதன் பின்பு தற்போதும் பேருந்து சிக்கியிருப்பதும், 2015 மற்றும் 2021 சென்னை மழை வெள்ளத்தில் அரங்கநாதன் சுரங்கபாதையில் மட்டுமே பேருந்து சிக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications