ஹைக் 54%? மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்..அகவிலைப்படி சம்பளமும் உயர்கிறது.. இன்று அறிவிப்பு?
டெல்லி: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிரடியாக உயர போகிறது.. இன்றைய தினம் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதால், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று, மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார்கள்.
அரசு ஊழியர்களின் இந்த சம்பள உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளியாகும். அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை வருடத்துக்கு 2 முறை உயர்த்துவது வழக்கமாகும்.. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இந்த அகவிலைப்படி உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டு, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இன்று கூட்டம்: எப்போதுமே, ஜனவரி மாத சம்பள உயர்வு மார்ச் மாதத்தில்தான் அறிவிக்கப்படும்... அதேபோல ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த உயர்வு அக்டோபர் மாதம்தான் அறிவிக்கப்படும்... ஆனால், இப்போது செப்டம்பர் மாதத்திலேயே இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட போவதாக தெரிகிறது. காரணம், இன்று செப்டம்பர் 25ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு கணிசமாக கிடைக்கும்... அத்துடன் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகையும் சேர்த்து கிடைக்கும் என்றே சொல்கிறார்கள்.
அகவிலைப்படி: அதன்படி பார்த்தால், 3 சதவீத அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மொத்த அகவிலைப்படி 53 சதவீதமாக அதிகரிக்கும்... ஒருவேளை, 4 சதவீதம் அதிகரித்தால் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 54 சதவீதமாக உயரும்... இது தற்போதைய 50% இல் இருந்து குறிப்பிடத்தக்க உயர்வு ஆகும். உதாரணமாக, ஒருவர் மாதம் ரூ.50,000 சம்பாதித்தால், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 அதிகமாகப் பெறுவார். அதாவது, 51,500 ரூபாய் சம்பளம் பெறுவார்.
எப்படி பார்த்தாலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த குட்நியூஸ் வரப்போவதால், ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள்.
டபுள் மகிழ்ச்சி: 3- 4 சதவீதம் முதல் உயர்வு என்றால், ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரடி பலனை அளிக்கும். அதுமட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு கீழ் பென்சன் மட்டுமன்றி அகவிலைப்படியும் சேர்ந்து வழங்கப்படுவது டபுள் தித்திப்பு செய்தியாகும்.
-
அன்று vs இன்று.. சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் சந்தித்த பெரிய மாற்றம் -
15,000 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம்.. தமிழக அரசின் மெத்தனம்.. அப்போ சம்பள உயர்வு கிடையாது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications