அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்றாங்க.. நேரடியாக குற்றம்சாட்டிய மேயர் பிரியா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மேயரான எனக்கு அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று பிரியா தெரிவித்துள்ளார். மேயராக, மாமன்ற உறுப்பினராக மக்களுக்காக பணியாற்றி வருவதாக கூறிய மேயர் பிரியா, தவெக எம்எல்ஏ பல்லவி என்னுடைய வார்டில் உணவு கொடுக்க எந்தவித தடையையும் ஏற்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ரிப்பன் மாளிகையில் சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் குழுவின் தலைவர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, வில்சன், பிரவீண் சக்கரவர்த்தி, எம்எல்ஏ-க்கள் சேகர்பாபு, பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின் மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்த போது, மேயருக்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

Mayor Priya

அதற்கு மேயர் பிரியா, அம்ருத் திட்டம் மூலமாக மெட்ரோ துறை சார்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு திருவொற்றியூர், அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர், பெருங்குடி உள்ளிட்டவை எல்லாம் சென்னையுடன் இணைக்கப்பட்டது. அப்போதைய ஆட்சியில் எந்தவித பணிகளும் செய்யப்படவில்லை.

ஆனால் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் அம்ருத் திட்டம் மூலமாக சோழிங்கநல்லூரில் பல்வேறு மெட்ரோ திட்டப் பணிகள் நடந்து வருகிறது. வடசென்னை வளர்ச்சி திட்டம் மூலமாக வடசென்னையிலும் மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் போதுமான நிதி இல்லாததன் காரணமாக அம்ருத் திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், கூடுதல் பகுதிகளில் பணிகளை செய்ய முடியும். ஒரு மேயராக தொடர்ந்து நாங்கள் மக்களுக்காக செயல்பட்டு வருகிறோம். அதேபோல் அதிகாரிகள் மேயராக எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. அதேபோல் தவெக எம்எல்ஏ பல்லவி என் வார்டில் உணவு கொடுக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.

அன்றைய தினம் நடந்தது என்னவென்றால், பள்ளி மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்ட உணவு கொடுக்க வந்தார்கள். 400 பேருக்கு இருந்த உணவை தொகுதி முழுக்க கொடுக்க முடியாது. அதனால் உங்களுக்கு எந்த இடத்தில் கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுங்கள் என்று கூறிவிட்டேன். அடுத்த 2 நாட்களில் சுகாதாரத்துறை அமைச்சர் என் வார்டில் வந்து ஆய்வு செய்தார். உணவு கொடுக்க கூடாது என்று தடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+