Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டை உடைக்கப் பார்ப்பவர்கள் சனாதனத்திற்கு எதிராக பேசுகிறார்கள்.. ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனாதனத்திற்கு எதிராக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தது தேசிய அளவில் சலசலப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், சனாதனம்தான் அனைத்திற்கும் அடிப்படை, இந்த அடிப்படையை உடைக்க முயல்வது நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

Governor RN Ravi alleged that speaking against Sanatana is an attempt to divide the country

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்திரப் பிரதேசம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற கண்டனங்களுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்" என்று கறாராக கூறியிருந்தார்.

தமிழ்நாடு அமைச்சர்களும் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம்தான் அனைத்திற்கும் அடிப்படை, இந்த அடிப்படையை உடைக்க முயல்வது நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற உடுப்பி ஸ்ரீ வித்ய திஷ்ய தீர்த்த சுவாமி சனாதன உற்சவம் வழிப்பாட்டு நிகழ்வில் ஆளுநர் ரவி இவ்வாறு பேசியுள்ளார்.

அவர் மேலும் பேசியதாவது, "இந்தியா என்பது பாரத் என அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். இப்படியாக பாரதம் உருவானதே சனாதன தர்மத்தில்தான். சனாதனத்தில் எல்லாம் உள்ளது. இலை இல்லாமல், கிளை இல்லாமல் மரம் வாழலாம், ஆனால் வேர் இல்லாமல் மரம் வாழ முடியாது. இப்படி மரத்தின் அடி வேர் போல் இருப்பது சனாதனம். சனாதனத்தின் அடிப்படை அத்தியாயம் நம் வேதங்களில் உள்ளது. சனாதன தர்மம் உலகின் தேவையாக உள்ளது.

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இடங்கள் சனாதனம் தர்மத்தின் சான்றுகளாக இருக்கின்றன. ஆனால் நாட்டை உடைக்கப் பார்ப்பவர்கள் சனாதனத்திற்கு எதிராக பேசுகின்றனர்" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே சனாதனத்திற்கு எதிராக தமிழக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், ஆளுநரின் இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+