அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு: அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்ட ஆளுநர்!
சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்என் ரவி பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் அவரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதையடுத்து செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரிந்துரை செய்தார்.
மேலும் செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக இருக்கவும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதில் இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கினார். மாறாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதாவது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இது கடந்த 16ம் தேதி நடந்தது.

இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 12 நாட்களாக அமைதி காத்து வந்த ஆளுநர் ஆர்என் ரவி இன்று அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிட்டார். அதன்படி தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியை நீக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, ஆளுநரின் முந்தைய உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை பெற ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிடிஐ செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஆளுநர் ரவி, அட்டர்ஜி ஜெனரலிடம் ஆலோசனை கேட்டுள்ளதால், அதுவரை, செந்தில் பாலாஜியை நீக்கி வைக்கும் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிகிறது. செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பார். இதனை முதல்வருக்கு மற்றொரு கடிதம் வாயிலாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications