வழக்கமா எதிர்க்கட்சியைத்தான் ஓட விடுவார் நம்ம முதல்வர்.. இன்று ஆளுநரை ஓட விட்டுள்ளார்: உதயநிதி
சென்னை: வழக்கமாக எதிர்க்கட்சிகளைத்தான் ஓட விடுவார், ஆனால் இன்று சட்டப்பேரவையில் ஆளுநரையே ஓட வைத்துள்ளார் நமது முதல்வர் மு.க ஸ்டாலின் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டையில் பரபரப்பாக பேசினார். மேலும் இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்றால் அது நமது முதல்வர் தான் என பேசினார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. வழக்கம் போல் ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றினார்.
ஆளுநர் உரையை தொடங்கியதும் தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிட்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

திடீரென எழுந்த முதல்வர் ஸ்டாலின்
ஆனாலும், இந்த எதிர்ப்பு கோஷத்தை கண்டுகொள்ளாமல், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பேச்சை ஆங்கிலத்தில் தொடர்ந்தார். ஆளுநர் தனது உரையின் சில பத்திகளை படிக்காமல் விட்டு சென்றார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. யாரும் எதிபாராத வகையில் திடீரென எழுந்த முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் உரையின் மீதான தீர்மானத்தை முன்மொழிந்து பேசத் தொடங்கினார். ஆளுநர் தனது உரையை முழுமையாக படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும் என்று கூறினார்.

பாதியில் வெளியேறிய ஆளுநர்
மேலும் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் உரை அவைக்குறிப்பில் இடம் பெறக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றினார். இதனால் ஆளுநர் அவையிலிருந்து பாதியில் வெளியேறினார். இதனால் தமிழக சட்ட சபையின் முதல் நாளே பெரும் பரபரப்புடன் நிறைவு பெற்றது. தமிழ்நாடு ஆளுநரின் செயல் அவை மாண்புக்கும் சட்ட விதிகளுக்கும் எதிரானது என்று தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்த நிலையில், தமிழக சட்ட சபையில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், வழக்கமாக எதிர்க்கட்சிகளை ஓடவிடக்கூடிய முதல்வர் இன்று ஆளுநரையே ஓட விட்டுள்ளார் என்று பேசினார். சென்னை சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக கூறியதாவது:-

ஆளுநரையே ஓட விட்டுள்ளார்
இன்று காலையிலேயே நடந்த ஒரு நிகழ்வு.. நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வரலாற்றிலேயே இல்லாத நடக்காத மாதிரி ஒரு சம்பவம் செய்திருக்கிறார் நம்ம தலைவர்.. பொதுவாக நம்ம தலைவர் அவர்கள் தன்னுடைய பதிலில் கொண்டு வருகின்ற அறிவிப்புகளில் எதிர்க்கட்சிகளை தான் ஓடவிடுவார். ஆனால் இன்று நம்ம ஆளுநரையே ஓட வைத்துள்ளார். நம்ம தலைவர் அவர்கள்... அப்படிப்பட்ட ஒரு முதலமைச்சர் நம்ம தமிழ்நாட்டு முதலமைச்சர்.

இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர்
தினமும் மக்களுக்கான பணிகள்.. மக்களுக்கான திட்டங்களை கொண்டு வருவதில்.. அதேபோல் நமது உரிமைகள் பறிபோனால் அதற்காக குரல் கொடுக்கும் இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்றால் அது நம்ம தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் தான். அவருக்கு நீங்கள் எல்லாம்.. இளைஞர்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும்.. உங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்.. தலைவர் அவர்களுடைய இந்த தன்னம்பிக்கையையும்.. உழைப்பையும் போல் நாம் ஒவ்வொருவரும் பெறுவோம் என நான் கேட்டுக்கொள்கிறேன். சென்னை மாவட்ட நிர்வாகிகளுக்கும்.. கிரிக்கெட் உபரகணங்களை பெற்ற இளைஞர்களுக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications