பல்கலை பட்டமளிப்பு விழா தாமதம்..தவிக்கும் 9 லட்சம் மாணவர்கள்..ஆளுநரே காரணம்..பொன்முடி குற்றச்சாட்டு
சென்னை: பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் ஆளுநர்தான் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பட்டமளிப்பு விழா நடைபெறாத காரணத்தால் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார்.
திருச்சி, கோவை, நெல்லை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெறமுடியாத சூழல் நிலவுகிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை என புகார் எழுந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடைசியாக 2021 டிசம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற்று இருந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற முடியாத நிலையில், பட்டமளிப்பு விழா நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், 4 பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பல்கலைகழகத்தில் ஜூன் 16-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. சேலம் பெரியார் பல்கலை.க்கு ஜூன் 28ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு ஜூன் 19ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. நாகையில் உள்ள ஜெயலலிதா மீனவ பல்கலை.க்கு ஜூலை 7ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் பட்டமளிப்பு விழா தாமதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பொன்முடி, பட்டமளிப்பு விழா தாமதத்திற்கு காரணம் ஆளுநர்தான் என்று கூறினார். மத்திய அமைச்சர்களை அழைத்து வந்து பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் திட்டமிடுகிறார். அவர்கள் தேதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது இதனால் தமிழ்நாட்டில் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குக் காரணம் தமிழக அரசு கிடையாது என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
ஆளுநர் எந்த தேதி கேட்டாலும், அதை நாங்கள் கொடுக்கிறோம். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு ஆளுநர் முன்வர வேண்டும். அதற்கு உயர்கல்வித்துறை உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications