Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிராம நத்தம், மேய்க்கால் புறம்போக்கு நிலம்! மீண்டும் முதியோர் ஓய்வூதியம்! தமிழக அரசு 3 ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று ஒரே நாளில் 3 வகையான முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.. இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.. அதேபோல, கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்குவது சாத்தியமற்றது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கடந்த மாதம், பட்டா வழங்குவது தொடர்பாக நிலையான வழிகாட்டுதல்களுடன் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் யாருக்கெல்லாம் பட்டா கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது..

Gram natham pastoralist lands patta old age pension

புறம்போக்கு, கிராம நத்தம்

அதன்படி, "பயன்பாட்டில் உள்ள பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலங்கள், கல்லாங்குத்து, புறம்போக்கு, கிராம நத்தம், அரசு நஞ்சை மற்றும் புஞ்சை மற்றும் பிற புறம்போக்கு நிலங்களில் வசிப்பர்களுக்கு பட்டா வழங்கப்படும். ஆனால், நீர் நிலைகள், கோவில், வழிபாட்டு தலம் மற்றும் வக்பு வாரியத்தின் பட்டா நிலங்கள், ஒன்றிய அரசு நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பட்டா பெற முடியாது" என்று அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

அதாவது, கோவில்கள், தேவாலயங்கள், வக்ஃபு வாரியம் பெயரில் உள்ள நிலங்களில் வசிப்போருக்கு, பட்டா வழங்க முடியாது. "கோவில்" வகைபாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கும், இந்த சிறப்பு திட்டத்தில் பட்டா வழங்கப்படாது.

நிலத்தின் மதிப்பை செலுத்தினால் பட்டா

அதேபோல, மாவட்ட தலைநகரம் மற்றும் மாநகராட்சிகளின் புற எல்லையில் இருந்து 18 கிலோ மீட்டர் சுற்றளவு மற்றும் நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளின் புற எல்லையில் இருந்து 8 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பெல்ட் ஏரியாவில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.. 3 லட்சம் மற்றும் அதற்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும்... அதேபோல, 3 லட்சத்திற்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள் அந்த நிலத்தின் மதிப்பை செலுத்தினால் பட்டா வழங்கப்படும்.

அரசின் இந்த அறிவிப்புக்கு காரணம், இதற்கு முன்பு வெளியாகியிருந்த அரசாணைகளை சுட்டிக்காட்டி, கோவில் நிலங்களுக்கு பட்டா பெற முயற்சிக்கக்கூடாது என்பதற்காகவே, எந்தெந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்பதை தனி விதிமுறையாக அரசு தெளிவுபடுத்தியிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இப்படிப்பட்டசூழலில், கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்குவது சாத்தியமற்றது என்று மீண்டும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்றைய தினம் சட்டப்பேரவையில் இதனை அறிவித்தார்.

நீர்நிலை புறம்போக்கு நிலங்கள்

மான்ய கோரிக்கை விவாதத்தின்போது, திமுக அப்துல் வஹாப், "நீதிமன்ற உத்தரவுகளை காரணம் காட்டி, நீர் நிலை புறம்போக்கு நிலங்களிலும், இந்து சமய அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட இடங்களிலும், நீண்ட காலமாக குடியிருப்போருக்கு பட்டா மறுக்கப்படுகிறது. கடந்த, 50 வருடங்களுக்கும் மேலாக குடியிருப்போரை, அங்கிருந்து அகற்றுவது சிரமமான விஷயம்.. அதனால், மக்கள் நலன் கருதி, விதிவிலக்கு அளித்து பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.

இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து பேசும்போது, "கோவில் நிலங்கள், "மைனர் சொத்து" என்ற வகையில் உள்ளன. இந்த இடங்களுக்கு பட்டா வழங்குவது சாத்தியம் இல்லை.. ஏற்கனவே பட்டா வழங்க முயற்சித்தபோது, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, பட்டா வழங்க தடை விதித்துள்ளது.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 2010ல், கோவில் இடங்களில் குடியிருப்போரை, குழு ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, வாடகைதாரர்களாக ஏற்றுக்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதை செயல்படுத்த அறநிலையத்துறை தயாராக உள்ளது" என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

50,000 பேருக்கு பட்டா

அதேபோல,சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பதிலளித்து பேசும்போது பட்டா தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், "நடப்பாண்டில், 6.29 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 3.55 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டு விட்டன. மீதம் உள்ள பட்டாக்களை மாதத்துக்கு, 50,000 வீதம் டிசம்பருக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 1.11 கோடி பட்டாக்களில் பெயர் மாறுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பகுதிகளில், வீடு வாங்கிய மக்களுக்கு நேரடியாக பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், விடுபட்டவர்களுக்கு விரைவாக பட்டா வழங்கப்படும்.

மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா

சென்னையை சுற்றியுள்ள, பெல்ட் ஏரியா பகுதியில் பட்டா வழங்க, 1962ல் தடை விதிக்கப்பட்டது. அதில் திருத்தம் செய்து, இப்போது பட்டா வழங்கும் பணி துவங்கியுள்ள நிலையில், இதற்கான விதிமுறைகளில் விரைவில் சிறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கோரி, இ-சேவை மையங்கள் வாயிலாக வரும் விண்ணப்பங்களை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளது.. கடந்த 2022ல் ஒரு வழக்கில், சென்னை ஹைகோர்ட் பட்டா வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.. இதை கருத்தில் வைத்து, இவர்களுக்கு என்ன செய்வது என்று அரசு யோசித்து வருகிறது.. அதுவரை, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போரை வெளியேற்றக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளோம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் வசிப்போர் தொடர்ந்து கண்ணீர் விடாத வகையில், விரைந்து மீட்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

கையகப்படுத்தப்பட்ட அரசு நிலங்கள்

கடந்த 4 வருடங்களில் ரூ.20,365 கோடி மதிப்புள்ள 35,654 அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளோம். ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, விமான நிலைய திட்டங்களுக்கு தேவையான நிலங்களை விரைவாக கையகப்படுத்தி கொடுத்து வருகிறோம். அந்த வகையில், மதுரை, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிக்கு தேவையான நிலம் முழுவதும் கையகப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்துக்கு இதுவரை 468 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் ஒரு கோடியே 11 லட்சம் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடியே 11 லட்சம் பேருக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ரேஸ்கோர்ஸ், தோட்டக்கலை சங்கம், ஊட்டி ரேஸ் கோர்ஸ் வைத்திருத்த அரசு நிலம் மீட்கப்பட்டு,மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களில் மட்டும் 20,330 கோடி ரூபாய் மதிப்புள்ள, 35,650 ஏக்கர் அரசு நிலம், தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

முதியோர் ஓய்வூதியத் தொகை

முதியோர் ஓய்வூதியத்தொகை கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் நிறுத்திவைக்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர் குறிப்பிட்டார். முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற முடியாது.

அந்த வகையில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களையும் முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் விவரங்களையும் ஆய்வுசெய்யும் பணி நடந்ததால்தான் ஜூலை மாதம் வழங்கப்படவில்லை. இப்போது தகுதியான பயனாளிகளுக்கு தொடர்ந்து முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக மேலும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+