பேரன் பிறந்த மகிழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன்! குழந்தைக்கு தங்கச் சங்கிலியை பரிசளித்த கனிமொழி எம்.பி.!
சென்னை: சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனுக்கு பேரன் பிறந்திருப்பதால், அக்குழந்தையை பார்க்கச் சென்ற கனிமொழி எம்.பி. தங்கச்சங்கிலியை பரிசாக அளித்திருக்கிறார்.
தனது குடும்பத்தினர் அனைவரையும் கனிமொழியிடம் அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் கீதா ஜீவன், குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
பேரன் பிறந்திருக்கும் சூழலிலும், வீட்டில் இருப்பதை தவிர்த்து வழக்கம் போல் தனது பணிகளை தூத்துக்குடியிலும், சென்னையிலும் கவனித்து வருகிறார் அமைச்சர் கீதா ஜீவன்.

அமைச்சர் கீதாஜீவன்
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் களமிறங்கியது முதல் தற்போது வரை அவருக்கு பக்கபலமாக இருப்பவர் அமைச்சர் கீதா ஜீவன். இவர்மட்டுமில்லை, இவரது தம்பியும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமியும் கனிமொழியின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார். கனிமொழி எம்.பி. கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் அக்காவையும், தம்பியையும் அவசியம் காணலாம்.

அமைச்சருக்கு பேரன்
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அக்குழந்தையை பார்ப்பதற்காக நேற்று மாலை அமைச்சர் கீதாஜீவன் இல்லத்துக்குச் சென்ற கனிமொழி எம்.பி., குழந்தைக்கு தங்கச்சங்கிலியை பரிசாக வழங்கி வாழ்த்தினார். மேலும், குழந்தையை தன் மடியில் வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். கனிமொழி தங்கள் வீடு தேடி வந்து குழந்தையை பார்த்துச் சென்றதால் அமைச்சர் குடும்பம் உற்சாகமடைந்துள்ளது.

வழக்கம் போல்
மகளுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்பதற்காக வீட்டிலேயே இருக்காமல், வழக்கம் போல் தனது பணிகளை ஆக்டிவாக கவனித்து வருகிறார் அமைச்சர் கீதாஜீவன். இதனிடையே இவர் திமுக துணைப் பொதுசெயலாளராக வர வாய்ப்புள்ளதாக ஆருடங்கள் கூறப்பட்ட நிலையில் மீண்டும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு வேட்பு மனு அளித்திருக்கிறார். இவருக்கு பெரியளவில் போட்டியில்லை என்பதால் மீண்டும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக வலம் வரவிருக்கிறார்.

கனிமொழி ஆதரவு
சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனும், அவரது தம்பி தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியும் கனிமொழியின் ஆதரவை பெற்றவர்கள் என்பதால் அவர்களது எதிர் கோஷ்டியினரின் புகார்கள் தலைமையிடம் எடுபடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications