ரேஷன் கடைகளுக்கு ஸ்ட்ராங் உத்தரவு.. இனிமே இப்படித்தான்.. ஆக்‌ஷனில் ஆபீசர்ஸ்.. மக்கள் செம்ம ஹேப்பி

ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றினை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இது பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..

 ஹேப்பி

ஹேப்பி

மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது. ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சிக்கல் ஏற்பட்டு வருவதால், மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கருவிழி பதிவு முறை கொண்டுவரப்படுவது முதல் பல்வேறு புதிய புதிய திட்டங்களை கூட்டுறவுத்துறை கையில் எடுத்து வருகிறது.

 கருவிழி திட்டம்

கருவிழி திட்டம்

அதேபோல, ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் சரியாகவும், முறையாகவும் செயல்படுத்தப்படுகிறதா என்கிற கண்காணிலும் ஈடுபட்டுள்ளது.. அந்தவகையில் முக்கிய உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது.. தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நியாயவிலைக் கடையில் மட்டுமே பொருட்களை வாங்க முடியும் என்ற நிலை முன்பு இருந்தது.. ஆனால், 2 வருடங்களுக்கு முன்பு, மாநிலத்தின் எந்த பகுதியிலும் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.

 ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

அதாவது, வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் உதவியாக அமையும் என்பதாலேயே இந்த சலுகை திட்டம் கொண்டு வரப்பட்டது.. யாராவது அட்ரஸ் மாறி வேறு இடத்துக்கு சென்றாலும்கூட, ரேஷன் கார்டில் அட்ரஸ் மாற்றம் செய்யாமலேயே, புதிய இடத்திலுள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.. இதன்மூலம், மின்னணு குடும்ப அட்டை இல்லாதவர்கள் தங்களது ஆதார் நம்பர், பதிவு செய்த செல்போன் நம்பருக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு ஆகியவற்றை பயன்படுத்தி, எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பதே அந்த சலுகையாகும்..

 புது அட்ரஸ்

புது அட்ரஸ்

இதனால் நியாயவிலைக் கடையில் திடீரென தேவை அதிகரிக்கும் என்பதால் அத்தியாவசியப் பொருட்கள் 5 விழுக்காடு அளவுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், பொருட்கள் இருப்பு இல்லை என கூறி தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களை திருப்பி விடக் கூடாது என்றும் அப்போதே ரேஷன்கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.. ஆனால், தற்போது இதில்தான் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாம். ரேஷன் கடை ஊழியர்கள், தங்கள் கடையை சாராத கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்குவதில்லையாம்.. மாதத்தின் கடைசி நாளில் மட்டுமே பொருடக்ளை வழங்குவதாக புகார்கள் ஆங்காங்கே வெடித்து கிளம்பி உள்ளன.

 சபாஷ் + மகிழ்ச்சி

சபாஷ் + மகிழ்ச்சி

இதற்காக அதிகாரிகள் முக்கிய உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளனர்.. உணவுத்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து சொல்லும்போது, "ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் அதில் இணைக்கப்பட்டுள்ள கார்டுகளுக்கு உரிய பொருட்களுடன், வேறு கார்டுதார்கள் வாங்குவதற்காக கூடுதலாக 6 சதவீத பொருட்கள் அனுப்பப்படுகின்றன.. அதனால், கடைகளில் ஆய்வு செய்து, 'எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம்' குறித்து, கண்காணித்து பொருட்கள் தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதுடன், பொருட்கள் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+