"கெஞ்சி கேட்டுக்கறேன்.. 2 வழிதான் இருக்கு".. உருகிய ஸ்டாலின்.. வித்தியாசமான பேச்சு.. ஹைலைட்டே இதுதான்
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் துவங்கி வைத்தார்
சென்னை: போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று துவங்கி வைத்தார்... இதையடுத்து, போதை தடுப்புக்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றைய தினம் முதல்வரின் உரையானது, முழுக்க முழுக்க அறிவுரைகளாகவே இருந்ததுடன், கவலையும், அக்கறையும் அவரது பேச்சில் வெளிப்பட்டதையும் அனைவராலும் நன்கு உணர முடிந்தது.
Recommended Video
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்..
மேலும் ஆகஸ்ட் 11-ம் தேதி நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவர்களுக்கு முதல்வர் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்..

கலெக்டர்கள்
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களை தயவுதாட்சண்யம் பாராமல் கைது செய்ய வேண்டும் என்று போதைபொருள் தடுப்பு விவகாரத்தில் டிஜிபிக்கு முழு சுதந்திரம் தந்து உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தநிலையில், நேற்றுகூட ஆட்சியர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்கு பெறும் கலந்தாய்வு கூட்டத்தை முதல்வர் நடத்தியிருந்தார். அப்போது, போதை தடுப்புக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை கடுமையாக கையில் எடுக்க வேண்டு என்றும் உத்தரவிட்டிருந்தார்.

சேகர்பாபு
இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 12 முதல் 19ம் தேதி வரை போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது... இதையடுத்து, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் துவங்கியது. இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று, உரையாற்றினார்.

வாசகங்கள்
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சாரத்தை வாக்குறுதியுடன் துவங்கி வைத்தார்.. முதல்வர், உறுதிமொழி வாசகங்களை படிக்க படிக்க, அங்கிருந்தோர் அனைவரும் அதே வாசகங்களை திரும்ப சொல்லி போதை ஒழிப்புக்கான உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர்.. ஸ்டாலின் வாக்குறுதியில், "போதைப்பொருள் போதைப்பழக்கத்தால், ஏற்படக்கூடிய தீமை விளைவுகளை நான் முழுமையான அறிவேன்.. நான் போதைக்கு ஆளாக மாட்டேன். என் நாட்டிலும், எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும், போதைப்பழக்கத்திறுகு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.

பயன்பாடு
போதைக்குள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக ஆற்றுவேன்.. போதைப்பொருட்கள் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் போதைப்பொருட்களை தமிழகத்தில் வேரறுக்க துணை நிற்பேன்.. இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று உறுதிமொழி வாசித்தார் முதல்வர் ஸ்டாலின்.

வருத்தம்
இதற்கு பிறகு முதல்வர் உரையாற்றினார்.. வழக்கமாக முதல்வர் ஸ்டாலின் உரையில் அரசியல் நெடி காணப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் அவரது பேச்சு முற்றிலும் அறிவுறுத்தல்களாகவே இருந்தது.. மிகவும் உருக்கமாக சில விஷயங்களை ஸ்டாலின் பேசியிருந்தார்.. குறிப்பாக அவர் பேசும்போது, "பல்வேறு பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு போனாலும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் "மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்" என்று சொல்வேன்..

2 வழிகள்
ஆனால், இந்த நிகழ்ச்சியில் மட்டும் அப்படி சொல்ல முடியவில்லை.. ஒருவிதமான கவலையில், வேதனையிலும்தான் கலந்து கொண்டுள்ளேன்.. தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை மருந்து பயன்பாடு அதிமாகி கொண்டே வருகிறது.. இது எனக்கு வருத்தமாக, கவலையாக உள்ளது.. இதை தடுக்க வேண்டுமானால், 2 விதமான வழிகளை நாம் கையில் எடுக்க வேணடும்.. முதல் வழி, போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.. அதனை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும்.

முதல் வழி
இரண்டாவது வழி, போதை பொருள் வேண்டாம் என்றும் போதை பொருளின் பாதிப்பையும், விழிப்புணர்வாக உணர்த்த வேண்டும்.. முதல்வழிசட்டத்தின் வழியாகும்.. இதை அரசும், முக்கியமாக காவல்துறையும் கவனிக்கும்.. ஆனால், இந்த 2வது வழி விழிப்புணர்வு வழி.. இதை பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் விழப்புணர்வை ஏற்படுத்த முடியும்.. போதை நடமாட்டத்தை முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. ஆனாலும் அவர்கள் கைகளுக்கு போதை எப்படியாவது போய் சேர்ந்துவிடுகிறது.. இதை தான் தடுக்கவேண்டும்

கெஞ்சி கேட்டுக்கறேன்
யாரும் போய் போதையில் மாட்டிக்காதீங்க.. அது நம்மை அழிவு பாதைக்கு மட்டுமே இழுத்து செல்லும்.. அதை பயன்படுத்தினால், முதலில் மூளையில் செயல்பாடு குறையும்.. பிறகு மந்தம் ஏற்படும்.. தன்னம்பிக்கை குறையும்.. தனியாக இருக்கும்படி தோணும்.. மனநிலை மெல்ல மாறும்.. இதயம் பாதிக்கப்படும்.. நுரையீரல் பாதிக்கப்படும்.. கேன்சர் வருகிறது.. பக்கவாதம் ஏற்பட்டு மொத்தமாக படுக்க வைத்துவிடுகிறது.. இந்த போதையை விலை கொடுத்து வாங்கலாமா? இந்த அழிவு பதையில் செல்லலாமா? உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன்.. இதை மட்டும் விட்டுடுங்க.. பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கு மிக மிக முக்கியம்" என்றார்.

ஹைலைட்
இந்த உரையில் முதல்வர் 2 சினிமா பாட்டுக்களை உதாரணமாக குறிப்பிட்டிருந்தது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒன்று, மறைந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய, "திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது.. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. " என்றார்.. அதேபோல, நிகழ்ச்சியை முடிக்கும்போது, "வளர்ந்து வராத பிறை இல்லை,வடிந்து விடாத நுரை இல்லை, திரும்பி வராத பகல் இல்லை, திருந்திவிடாத மனம் இல்லை" என்று மறைந்த வாலியின் பாடலை சொல்லி தன் உரையை முடித்தார் மு.க. ஸ்டாலின்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications