தமிழ்நாட்டில் களமிறங்கும் "அமுல்?" விவசாயிகளிடம் நேரடியாக டீலிங்.. அப்போ நம்ம ஆவின் என்னவாகும்!
சென்னை: தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் தனது பிஸ்னஸை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அவர்கள் தமிழக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் மாநிலம் முழுக்க பால் விற்பனை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் மற்ற தனியார் நிறுவனங்களின் விலையைக் காட்டிலும் ஆவின் பால் விலை குறைவு. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் மக்கள் பலரும் ஆவின் பாலை வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
மேலும், இதனால் தனியார் நிறுவனங்களும் ஆவின் பாலை ஒட்டியே தங்கள் பால் விலையையும் நிர்ணயம் செய்து வருகின்றனர். இங்கே மாநிலத்தில் பால் நேரடியாகவும் டீலர்கள் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் பல லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.

ஆவின்: இருப்பினும், கடந்த சில காலமாகவே ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தேவையைச் சமாளிக்கும் அளவுக்குப் போதியளவில் ஆவின் பால் விநியோகம் இருப்பதில்லை என்று புகார் கிளம்பியது. இதற்கிடையே தான் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பால்வளத்துறை பொறுப்பு மனோ தங்கராஜிடம் வழங்கப்பட்டது. அவர் பிரச்சினைகளைச் சரி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இதற்கிடையே இந்தியாவின் மிகப்பெரிய பால் நிறுவனமான அமுல் நிறுவனத்தை நடத்தி வரும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) தமிழ்நாட்டில் பால் கொள்முதலைத் தொடங்க ரெடியாக வருகிறது. தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் என வட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்குப் பால் அமுலுக்கு பாலை வழங்கலாம் என்று விளம்பரங்கள் வெளியிட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கொள்முதலை ஆரம்பிக்க அமுல் முயன்றது. இருப்பினும், அப்போது அது வெற்றிகரமாக அமையாத நிலையில், இப்போது அமுல் இரண்டாவது முயற்சியை எடுக்கிறது. இப்போது அமுல் நெய், மில்க் ஷேக் மற்றும் ஐஸ்கிரீம்களுக்கு மாநிலம் முழுக்க டீலர்களை கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன பிளான்: இருப்பினும், தமிழகத்தில் பால் கொள்முதல் குறித்து இங்குள்ள அமுல் அதிகாரிகள் எதுவும் கூறவில்லை. எல்லையோர மாவட்டங்களில் இருந்து பாலை கொள்முதல் செய்யத் திட்டமிடும் அமுல், அதைக் கர்நாடகா அல்லது ஆந்திராவிற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக 5 எல்லைரோமாவட்ட விவசாயிகளிடம் அமுல் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆவின் வழங்கும் விலையை விட லிட்டருக்கு ரூ.1 அல்லது ரூ.2 கூடுதலாக வழங்குவதாக அவர்கள் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
நேரடியாக டீலிங்: இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "அமுல் தரப்பில் இருந்து சிலர் எங்களிடம் வந்து பேசினார்கள். பாலை கொள்முதல் செய்தால் ஓரிரு நாட்களுக்குள் கட்டணம் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.. மேலும், மாதாந்திர அல்லது காலாண்டு ஊக்கத்தொகையை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டனர்.. இருப்பினும், இதுவரை எந்தவொரு ஒப்பந்தமும் போடவில்லை" என்றார்.
இது குறித்து ஆவின் தரப்பில் அதிகாரிகள் சிலர் கூறுகையில், "மற்ற தனியார் நிறுவனங்கள் செய்வது போல், மாநிலத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்ய அமுல் பிரதிநிதிகளை நியமிக்கலாம். அதில் தவறு இல்லை.
இருப்பினும்,, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட குஜராத்திற்கு வெளியே சில மாநிலங்களில் கூட்டுறவுச் சங்கத்தை அமைத்தது போல தமிழ்நாட்டில் அவர்களால் கூட்டுறவுச் சங்கத்தை அமைக்க முடியாது சட்டப்படி, தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் மட்டுமே மாநிலத்தில் கூட்டுறவுச் சங்கத்தை அமைக்க முடியும்" என்றார்.
தமிழ்நாடு பால் தேவை: தமிழகத்தில் ஒரு நாளைக்குப் பால் தேவை 2.2 கோடி லிட்டராக உள்ளது.. இதில் ஒரு கோடி லிட்டர் பால் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.. மீதமுள்ள பால் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 33 முதல் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது.
குஜராத். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம் எனப் பல மாநிலங்களில் இருந்தும் அமுல் நிறுவனம் தினசரி 1.2 முதல் 1.3 கோடி லிட்டர் பாலை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறது. இந்தச் சூழலில் தான் தமிழ்நாட்டிலும் அவர்கள் கொள்முதல் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
பால் சந்தையில் போட்டி வருவது நல்லது தான்.. அப்போது தான் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க பொதுச் செயலர் எம்.ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "ஆனால், அமுல் நிறுவனத்தை மட்டுமே நம்பி, புதிய கறவை மாடுகள் எனப் பெரிய முதலீடுகளைச் செய்ய முடியாது. அவர்களின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகளை நன்கு ஆலோசித்த பின்னரே எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள்: இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், "நமது விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்குத் தான் பிரத்தியேகமாகப் பாலை வழங்கி வருகிறார்கள். அமுல் இப்படி வருவதால் ஆவினுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
இரண்டு லட்சம் கறவை மாடுகளை வாங்குதல், கால்நடை காப்பீட்டிற்கு 50% மானியம் பிரீமியம், மற்றும் கால்நடை தீவனம் மற்றும் தீவனங்களுக்கு மானியம் என மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக ஆவின் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. எனவே, அமுல் ஒரு அச்சுறுத்தலாக எல்லாம் இருகாது" என்றார்.
சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடக தலைநகர் பெங்களூரில் அமுல் டோர் டெலிவரி மூலம் பால் விற்பனையைத் தொடங்குவதாக அறிவித்திருந்தது. இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications