கும்மிடிப்பூண்டி சுதர்சனம் கொலை வழக்கில் மூவரும் குற்றவாளிகளே! சென்னை ஸ்பெஷல் கோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சுதர்சனம் கொலை வழக்கில், இன்று அதாவது நவம்பர் 21ம் தேதி சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி, பவாரியா கும்பலை சேர்ந்த ராகேஷ், அசோக், ஜெகதீஷ் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் கே. சுதர்சனம்.. இவருக்கு 52 வயது..

கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சிறிது காலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இவர் பெரியபாளையம் அருகே உள்ள தானாகுளம் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
2005-ல் நடந்த பயங்கரம்
கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி நள்ளிரவு நேரம் அந்த பயங்கர சம்பவம் நடந்தது.. சுதர்சனம் தனது குடும்பத்துடன் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 6 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அவரது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போனது.
வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், சுதர்சனத்தின் இளைய மகன் சதீஷை தாக்கி, அவரை ஒரு தனி அறையில் பூட்டிவைத்தனர். சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சுதர்சனம் மாடியில் இருந்து அலறியபடியே கீழே ஓடி வந்தார்.
அப்போது, அந்த கொள்ளைக் கும்பல் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பிறகு துப்பாக்கி முனையில் மிரட்டி, வீட்டில் இருந்த சுமார் 50 முதல் 62 சவரன் வரையிலான தங்க நகைகள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
களமிறங்கிய ஐ.ஜி. ஜாங்கிட்
மக்கள் பிரதிநிதி ஒருவரை, அதுவும் முன்னாள் அமைச்சரை வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் மிகபெரிய அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க வேண்டும் என்று ஆவேசமாக உத்தரவிட்டார். அப்போது ஐ.ஜி.யாக இருந்த ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன. இந்தத் தனிப்படை மிகவும் துரிதமாகச் செயல்பட்டு, கொலை நடந்த அடுத்த மாதத்திலேயே கொள்ளையர்களைக் கண்டறிந்தது.
பவாரியா கும்பல் யார்?
விசாரணையில், இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. அதுமட்டுமல்ல, இது ஒரு பழங்குடி கொள்ளைக் கும்பல் என்றும், இவர்கள் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை வழிமறித்துக் கொள்ளையடிப்பது மற்றும் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் உள்ள பணக்கார வீடுகளில் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் அரியானா மாநிலத்தை சேர்ந்த முக்கியக் குற்றவாளியான ஓம் பிரகாஷ் (ஓமா), அவரது சகோதரர் ஜெகதீஷ், மற்றும் ராகேஷ், அசோக், ஜெயிந்தர் சிங் உள்ளிட்ட 9 பேர் கும்பலைத் தனிப்படையினர் ராஜஸ்தானில் கைது செய்தனர்,... இதில் ஜாமீன் பெற்ற 3 பெண்கள் தலைமறைவாகி விட்டனர்.
20 ஆண்டு கால சட்டப்போராட்டம்
கைது செய்யப்பட்ட 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், முக்கியக் குற்றவாளியான ஓம் பிரகாஷ் உள்ளிட்ட 2 பேரும் உடல் நலக்குறைவால் ஜெயிலுக்குள்ளேயே உயிரிழந்துவிட்டார்.
மிச்சமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக நடந்து வந்தது. இந்த வழக்கில் மொத்தம் 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து முடிவுக்கு வந்தது.. இறுதியில் நவம்பர் 21-ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்..
அந்தவகையில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. மிக நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இந்த வழக்கில் வழங்கப்பட உள்ள தீர்ப்பு, தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி, பவாரியா கும்பலை சேர்ந்த ராகேஷ், அசோக், ஜெகதீஷ் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில், ஹரியானாவை சேர்ந்த பவாரியா கொள்ளையர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று பலமாகவே தமிழகத்தில் அதிகரித்தது. . ஆனால், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை சென்னை சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 24ம் தேதி அறிவிக்கிறது
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications