• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவன் கோயில் கட்டுனது யாரு? ராஜராஜ சோழன் “இந்துவா”என கேட்ட வெற்றிமாறன் -எச்.ராஜாக்கு வந்துச்சே கோபம்

Google Oneindia Tamil News

சென்னை: வள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என பல அடையாளங்கள் நம்மிடம் இருந்து பறிக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ள கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்..

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை அக்கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா நேற்று நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், "என்னுடைய நண்பர் ஒரு விரிவான ஆய்வை செய்திருக்கிறார். எப்படி இலக்கியம், சினிமா அவர்கள் கையில் இருந்தது? என்பதையும், அவர்களிடம் இருந்து சினிமாவை திராவிட இயக்கம் எப்படி கைப்பற்றியது? என்பதையும் விளக்கி இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இல்லாவிட்டால் இந்தியாவே செத்திருக்கும்.. அதை தடை செய்யச் சொல்வதா? - எச்.ராஜா ஆவேசம்! ஆர்.எஸ்.எஸ் இல்லாவிட்டால் இந்தியாவே செத்திருக்கும்.. அதை தடை செய்யச் சொல்வதா? - எச்.ராஜா ஆவேசம்!

திராவிட இயக்கம்

திராவிட இயக்கம்

திராவிட இயக்கம் தமிழ் சினிமாவை கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் மதசார்பற்ற மாநிலமாகவும், பல புற சக்திகளின் ஊடுருவலை தடுக்கக்கூடிய பக்குவத்துடன் இருக்கிறது என்று நினைக்கிறேன். சினிமா என்பது வெகு மக்களை மிக எளிமையாக சென்றடையக்கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியமானது.

கலை யாருக்கு?

கலை யாருக்கு?

இடைப்பட்ட காலத்தில் இது இல்லாமல் இருந்தது. திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும்போது, இலக்கியத் துறையை சேர்ந்தவர்கள் 'கலை கலைக்காகதான், கலை மக்களுக்கானது இல்லை' என்றார்கள். அழகியல் பற்றி நிறைய பேசினார்கள். கலையில் அழகியல் முக்கியமானதுதான். ஆனால், மக்களிடம் இருந்து விலகி எந்த கலையும் முழுமையடையாது. மக்களுக்காகதான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை.

ராஜராஜ சோழன் இந்துவா?

ராஜராஜ சோழன் இந்துவா?

இந்த கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.

ஆர்.எஸ்.எஸ். பேரணி

ஆர்.எஸ்.எஸ். பேரணி

சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும். அதற்கு நாளை நடப்பதாக இருந்த அந்த நிகழ்வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பே மிகப்பெரிய உதாரணம்.

 ஆதரிக்கிறேன்

ஆதரிக்கிறேன்

இதுபோல் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். அதற்கு என்னுடைய நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிப்பதற்காக இந்த மேடையை கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் என்னால் முடிந்த சிறிய அளவிலான பங்களிப்பை கொடுப்பேன். கண்டிப்பாக நீங்கள் அச்சப்படும் அளவுக்கு எதுவும் நடக்காது." என்றார்.

 எச்.ராஜா கண்டனம்

எச்.ராஜா கண்டனம்

இந்த நிலையில் ராஜராஜ சோழன் இந்துவாக மாற்றப்பட்டா என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒன் இந்தியா தமிழில் வெளியான செய்தியை ட்விட்டரில் ரீட்வீட் செய்து பதிவிட்டுள்ள அவர், "சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

English summary
H.Raja condemn Tamil film Director Vetrimaran has said that "They dressing Thiruvalluvar with saffron, and Making Rajaraja Chola as a Hindu king. He also said many symbols are being taken away from us and request that film directors should be politicised."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X