ஹைகோர்ட்டுக்கு போயும் இப்படியா.. வக்கீல்களுடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா.. எதுக்குன்னு பாருங்க!
எச்.ராஜா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் இருக்கைக்காக வாக்குவாதமும் செய்தது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
Recommended Video

சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் இருக்கைக்காக வாக்குவாதமும் செய்தது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
கடந்த மாதம் புதுக்கோட்டை அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எச்.ராஜா நீதிமன்றங்களை குறித்து பேசி சர்ச்சைக்கு உள்ளானார். போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திட்டினார்.
இதற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார் .

காலையிலேயே வந்தார்
எச்.ராஜாவின் வழக்கு இன்று காலை 11 மணிக்குத்தான் விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதிசயமாக எச்.ராஜா வேகமாக வந்து 9 மணிக்கே நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டார். மிகவும் குறைந்த அளவிலான பாஜகவினரே அவருடன் வந்திருந்தனர். முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவில்லை.

மீண்டும் சர்ச்சை
9 மணிக்கே வந்தவர் 2 மணி நேரம் காத்திருந்துள்ளார். ஆனால் அந்த நேரம் கூட அமைதியாக இல்லாமல் நேரடியாக சென்று வக்கீல்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இருக்கையில் சென்று அமர்ந்துள்ளார். விசாரணைக்காக வந்திருக்கும் ஒரு நபர், அதுவும் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கும் ஒரு நபர் இப்படி நேரடியாக வந்து வக்கீல்கள் இருக்கையில் அமர்ந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சண்டை போட்டார்
இதைப்பார்த்த அங்கிருந்த வக்கீல்கள் உடனே கோபத்திற்கு உள்ளானார்கள். வேகமாக சென்று எச்.ராஜாவுடன் வாக்குவாதம் செய்தனர். 5 நிமிடம் வரை இந்த வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து வக்கீல்கள் பலர் அங்கு கூடியதால் எச்.ராஜா அந்த இடத்தை விட்டு எழுந்து, வேறு இடத்தில் சென்று அமர்ந்தார்.

ஏன் பாஸ்
இந்த பிரச்சனை காரணமாக சென்னை ஹைகோர்ட்டில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது. ஏற்கனவே தவறாக பேசி சர்ச்சையில் சிக்கித்தான் எச்.ராஜா விசாரணையில் சிக்கி உள்ளார். அப்படிப்பட்ட நிலைமையிலும் கூட, வக்கீல்களுடன் சண்டை போட்டது சர்ச்சையாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications