எச்.ராஜா பேத்தி பெயர் ஜெயலலிதாவாம்.. கொடைக்கானலில் குடும்பத்துடன் ரெஸ்ட்!
பேத்தி ஜெயலலிதாவுடன் எச் ராஜா கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார்
சென்னை: எத்தனை பேருக்கு இது தெரியும்னு தெரியல. எச்.ராஜா பேத்தி பெயர் ஜெயலலிதாவாம்!
நெட்டிசன்களுக்கும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் ரொம்பவே பிடிச்ச பெயர் எச்.ராஜா! அதேபோல, பெரியார் ஆதரவாளர்கள், தமிழின போராளிகளுக்கு ரொம்பவே பிடிக்காத பெயர் எச்.ராஜா.

இதற்கு ஒரே காரணம், அரசியல் ரீதியாக யார் என்ன சொன்னாலும் அதற்கு ஒரு எதிர்ப்பு சொல்வதுதான். அந்த எதிர்ப்பையும் அடுத்தவர் மனதை காயப்படுத்தும் அளவுக்கு வார்த்தைகளை பயன்படுத்துவதும், ஒரு கட்டத்தில் அதுவே வன்முறைக்கு வழிவகுப்பதுமாக இருப்பதும்தான் இவரது இயல்பாக உள்ளது!
பூஜை, விழாக்களில் எச்.ராஜா மனைவியுடன் கலந்து கொள்வதை நாம் நிறைய போட்டோக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் இவருக்கு ஒரு பேத்தி இருப்பதும், அந்த பேத்திக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்திருப்பதும் இப்போதுதான் தெரிகிறது.
இப்போ சம்மர் லீவு என்பதால் எச்.ராஜா கொடைக்கானலுக்கு டூர் போயுள்ளார். இப்பதான் அங்கே முக ஸ்டாலின் போய் வந்தார். இந்நிலையில் எச்.ராஜாவும் அங்கேயேதான் போயிருக்கிறார். இரண்டு நாள் டூர் என்கிறார்.
இரண்டு நாட்கள் குடும்பத்துடன் கொடைக்கானலில். பேத்தி ஜெயலலிதா enjoys vacation. pic.twitter.com/WXPUoZ8H75
— Chowkidar H Raja (@HRajaBJP) May 13, 2019
இது சம்பந்தமாக ஒரு போட்டோவையும் ட்வீட்டில் போட்டுள்ளார். அதில் எச்.ராஜா, அவரது மனைவி, பேத்தி ஜெயலலிதாவை மடியில் தூக்கிவைத்து கொண்டுள்ளனர். "இரண்டு நாட்கள் குடும்பத்துடன் கொடைக்கானலில். பேத்தி ஜெயலலிதா enjoys vacation" என்று பதிவிட்டுள்ளார்.
அந்த போட்டோவில் 3 பேருமே குளிருக்கு ஸ்வெட்டர் போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு கீழே நிறைய கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. ஆனால் அவை எல்லாமே "பேத்தி பெயர் ரொம்ப நல்லா இருக்கு" என்று பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications