கூட்டுறவுத் துறை ஹேப்பி நியூஸ்.. 3 நிமிடங்களில் முடிஞ்சிடும்.. கைரேகை பதிந்ததுமே கார்டுக்கு பொருள்
சென்னை: அத்தியாவசியப் பொருட்களை ஒரு குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு தற்போது 2 முதல் 3 நிமிடங்களே மட்டுமே ஆவதால் ஒரு நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் உண்மை தன்மை இல்லை என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான விளக்கத்தையும், அறிக்கை மூலம் தெரிவித்து, தெளிவுபடுத்தியிருக்கிறது. இதன் விவரங்கள் என்னவென்பதை பார்ப்போம்.
ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு முன்பு பிஎஸ்ஓ இயந்திரத்துடன் எடைபோடும் தராசையும் இணைக்கப்படுகிறது.. எடை தராசு நெட் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், தராசில் உள்ள பொருட்களின் எடை அளவுக்குதான், பில்லும் வரும்.

ஆனால், பிஎஸ்ஓ மிஷினுடன் தராசு இணைப்பு திட்டத்தால், சரியான எடையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.. ஆனால், அரிசி, பருப்பு, சர்க்கரை என ஒவ்வொரு பொருட்களுக்கும் கார்டுதாரர்களிடம் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்பதால், கார்டுக்கு 20 நிமிடங்கள் ஆகிறதாம்.. இந்த கால விரயத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்தது.
கூட்டுறவு நியாயவிலைக்கடைகள்
கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் பிஓஎஸ் கருவியுடன் எடை தராசினை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 28,736 கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
மின்னணு எடை தாரசுடன் விற்பனை முனைய கருவி இணைக்கப்பட்ட பிறகு தற்போது விற்பனை முனைய கருவியில் கைவிரல் ரேகையை பதிவு செய்த பின்னர் அத்தியாவசியப் பொருட்களை ஒரு குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு தற்போது 2 முதல் 3 நிமிடங்களே மட்டுமே ஆகின்றன. தற்போது பகுதி நேர நியாயவிலைக்கடைகளில் உள்ள பழையவிற்பனை முனைய இயந்திரந்தில் கைவிரல் ரேகை சரிபார்க்கும் முறை எவ்வித சிக்கல்களும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
காலதாமதம்
நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப்பொருட்கள் விநியோகத்தில் ஏற்பட்ட காலதாமதம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை தொடர்ந்து, எவ்வித சிக்கல்களும் இல்லாமல் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு தேவையான தொழில் நுட்பமாற்றங்கள் மென்பொருள் நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்கு தற்போது ஒருமுறை மட்டுமே குடும்ப அட்டைதாரரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. மின்னணு எடை தராசில் 35 கிலோ அரிசியை ஒரு முறையிலேயே எடை போடுவதற்குரிய மாற்றங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்யும் முதன்மைச் சங்கங்கள், சுய எடுப்புசங்கங்கள் அதன் பணியாளர் ஒருவரை நகர்வு பணியினை கண்காணிக்கும் வரையில் கிடங்குகளில் பணியமர்த்தம் செய்ய வேண்டும்.
கண்காணிப்பு தீவிரம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் லாரியுடன் முதன்மைச் சங்க சுய எடுப்பு சங்கபணியாளர் ஒருவர் கண்டிப்பாக செல்லவேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் சரியான எடையில் நகர்வு செய்யப்படுவதையும் லாரியில் நகர்வு பணியாளர்கள் செல்வதையும், நியாயவிலைக்கடைகளில் எவ்வித எடைகுறைவுமின்றி சரியான எடையில் இறக்கப்படுகின்றன என்பதையும் கூட்டுறவு சார்பதிவாளர், துணைப்பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
3 நிமிடங்களே ஆகிறது
மின்னணு எடை தராசுடன் விற்பனை முனைய கருவி இணைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 9ம் தேதி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களை ஒரு குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு தற்போது 2 முதல் 3 நிமிடங்களே மட்டுமே ஆவதால் ஒரு நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் உண்மை தன்மை இல்லை. இவ்வாறு கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை ஒரு குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு தற்போது 2 முதல் 3 நிமிடங்களே மட்டுமே ஆவதால் ஒரு நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் உண்மை தன்மை இல்லை என்கிறது கூட்டுறவுத்துறை
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications