Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்தே.. பஜ்ஜி செம ஹேப்பி அண்ணாச்சி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை அணியில் ஹர்பஜன் தக்க வைக்கப்பட்டார்: சந்தோஷ ட்வீட்

    சென்னை: 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் தக்க வைக்கப்பட்டதை அடுத்து சர்கார் படத்தில் வரும் சிம்டாங்காரன் பாடல் வரிகளை டுவீட் செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.

    ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் கற்று வருகிறார். மேலும் தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தமிழில் டுவீட் போடுகிறார். சமூக அக்கறை கொண்டவராகவும் உள்ளார் என்பதை பார்த்து ரசிகர்கள் அவரை கொண்டாடுகின்றனர்.

    மாத இறுதியில்

    மாத இறுதியில்

    பொங்கல், தீபாவளி வாழ்த்தோடு தற்போது தமிழ் சினிமா பாடல்களையும் பஜ்ஜி உள்வாங்கி வருவது மேலும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்தியன் ப்ரீமியர் லீக் டி-20 தொடரின் 12-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்குவதாக கூறப்படுகிறது.

    ஹர்பஜன் சிங்

    ஹர்பஜன் சிங்

    இதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் 3-வது வாரத்தில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே அந்த அணியில் இருக்கும் வீரர்களில் சிலரை அணி நிர்வாகம் தக்க வைத்துக்க முடியும். அந்த வகையில் ‘தல' தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வீரர்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

    டுவிட்டர்

    இந்நிலையில் சூதாட்ட புகாரில் சிக்கி சென்னை சூப்பர் கிங்க் அணி 2 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தடை நீக்கப்பட்டு தற்போது 3-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்திய அணியிலேயே தான் மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளதை, ‘சர்கார்' பட பாடல் வரிகளுடன் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    மேட்சும்

    மேட்சும்

    அவர் கூறுகையில் "தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன். திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் @ChennaiIPL. சும்மா நெருப்பா,சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா!
    வோர்ல்டு மொத்தமும்
    அரளவுடனும் பிஸ்து.
    பிசுறு கெளப்பி
    பெர்ளவுடனும் பல்து." என்று ஹர்பஜன் டுவீட் செய்துள்ளார். இவரது இந்த டுவீட்டும் எப்போதும் போல் வைரலாகியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+