"விட்டுறாதீங்க" அவரை.. ஸ்டாலின் ஆர்டர்.. "உச்சபட்ச ரகசியம்" காக்கும் பாஜக.. பின்னாடியே வந்த எடப்பாடி
சென்னை: அம்பாசமுத்திரம் பல்வீர் சிங் விவகாரத்தில், ஆளும் திமுக அரசுக்கு சிக்கல்கள் கூடிவருவதாக தெரிகிறது.. இது தொடர்பான சில செய்திகள் கசிந்து வருகின்றன.
அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்தவர் பல்வீர் சிங்.. அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறைக்கு பொறுப்பேற்றபிறகு, இவரது விசாரணை முறையே வித்தியாசமானதாக மாறியது..
சின்ன சின்ன குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக இவர் மீது புகார்கள் கிளம்பி பரபரப்பை கிளப்பியது.

கருங்கற்கள்
அதாவது, விசாரணை அழைத்து செல்லப்படுவோரின் பற்களை, இடுக்கியை பயன்படுத்தியே பிடுங்கி எடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.. இதைதவிர, கருங்கற்களை வைத்து, பற்களை பிடுங்கியதாகவும் சொல்கிறார்கள். இதனால் வலி பொறுக்க முடியாமல், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்களும் மருத்துவமனையில் இப்போது சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பற்களை பிடுங்கி தண்டனை அளிக்கும் ஏஎஸ்பி, மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்கள் பறந்தன. காவல்துறை அதிகாரிகளும் இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்தனர்.

சஸ்பெண்ட்
அதன்படி, ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டார்.. ஆனால், முதல்வர் ஸ்டாலினே இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டார்.. இதையடுத்து, ஏஎஸ்பி பல்பீர் சிங்கை சஸ்பெண்ட் செய்தது தமிழக அரசு. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்றும் நம்பிக்கையுடன் சொல்லியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.

உச்சபட்ச ரகசியம்
மற்றொருபக்கம், நாளிதழில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையமும், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.. இவ்வாறான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை ஒவ்வொன்றும் நடந்து வரும்நிலையில், அரசியல் ரீதியாகவும் இந்த புகார் எதிரொலித்துள்ளது.. முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பேசியிருந்தபோதிலும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்மறை தகவல்களை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தபடி இருக்கிறாராம் ஆளுநர் ரவி. கவர்னர் அனுப்பும் இந்த ரிப்போர்ட்டுகள் மத்திய உள்துறையில் "உச்சபட்ச ரகசியம்" என்கிற பேரில் பாதுகாக்கப்பட்டு வருகிறதாம்.

பல்பிடுங்கி விவகாரம்
ஆனால், பல்பீர்சிங்கின் பல்பிடிங்கி விவகாரம் தமிழக அரசுக்கு மிகப்பெரிய தலைவலியையும் கொடுத்துள்ளது... இந்த அதிகாரியை பாதுகாக்கும் வகையில் ஆரம்பத்தில் சில நடவடிக்கைகளை வடநாட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் எடுத்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், இந்த விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவும், அரசியல் ரீதியாகவும் கையாளப்படுவதை அறிந்து, பல்பீர்சிங் விஷயத்தில் சமரசம் கூடாது, நேர்மையான விசாரணை நடக்க வேண்டும் என்று உயரதிகாரிகளுக்கு அழுத்தமாக சொல்லியிருக்கிறாராம் ஸ்டாலின். எனினும், இந்த விஷயத்தை பாஜக விடுவதுபோல தெரியவில்லை.. இப்போது சட்டமன்ற கூட்டத் தொடர் நடந்து வருவதால், உள்துறை மானிய கோரிக்கையின்போது, சட்டம் ஒழுங்குக்கு எதிரான சம்பவங்களை அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் சேகரித்து வைத்துள்ளனராம்..

ஸ்ட்ரிக்ட்
குறிப்பாக, இந்த மானிய கோரிக்கையில் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால் உள்துறை மானிய கோரிக்கையின்போது பல்பீர்சிங் விவகாரம் உள்பட பல சம்பவங்களை காரசாரமாக எதிரொலிக்கும் என்பதால், பல்பீர்சிங் விவகாரத்தில் 'காம்ப்ரமைஸ்' கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர் ஸ்டாலின். இதனையடுத்து, நேற்று தலைமை செயலகத்துக்கு பல்பீர்சிங் வரவழைக்கப் பட்டார்.. அவரிடம் , தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பனீந்திரரெட்டி, உள்துறையை கவனிக்கும் முதல்வரின் செயலாளரான உதயச்சந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

டேமேஜ்
இதில், குற்றம் நடந்ததாக சொல்லப்படுவதை பல்வீர்சிங் மறுத்தாலும், உயரதிகாரிகளின் கேள்விகளால் குற்றம் நடந்ததை அவர் ஒப்புக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யலாமா? என்று முதல்வரிடம் ஆலோசித்து வருகிறாராம் உயரதிகாரிகள். ஒருவேளை பல்வீர் மீது நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், இந்த விஷயத்தை பெரிதாக்கி திமுகவை டேமேஜ் செய்ய எடப்பாடி & பாஜக தரப்பு ரெடியாகி வரும் நிலையில், முன்கூட்டியே சம்பந்தப்பட்ட பல்பீர்சிங் மீதான நடவடிக்கையை திமுகவே எடுத்துவிடும் என்கிறார்கள்.. இதனால் எதிர்க்கட்சிகளின் திட்டங்களும் முறியடிக்கப்பட்டுவிடும் என்றும் நம்பப்படுகிறது.
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications