"ஹோப்".. 2 பேருக்கு போனை போட்ட ஸ்டாலின்.. "புரியுதா? அது போதாது".. பறந்த உத்தரவு.. மலைத்த "புள்ளி"

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முதல்வர் ஸ்டாலின், பெருத்த நம்பிக்கை ஒன்றை தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலுக்கான மும்முரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.. இது தொடர்பாக, அதிமுக, பாஜக தரப்பில் தொடர்ந்து குழப்பநிலை நீடித்து வரும் நிலையில், திமுக கூட்டணியே படுஸ்பீடில் களத்தில் குதித்துள்ளது.. இது தொடர்பான சில தகவல்களும் கசிந்துள்ளன.

விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க போகிறது.. திமுக கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சி, தங்களுக்கான ஆதரவை பல்வேறு கட்சிகளிடம் கோரி வருகிறது. அவருக்கு விசிக, மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 நச் வைகோ

நச் வைகோ

மக்கள் நீதி மய்யமும் முன் வந்து, நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியே அபார வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் முதல் இரா.முத்தரசன் வரை உறுதியாக சொல்லி வருகிறார்கள்.. அதன்படியே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கினாலும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் திமுக இப்போதே களத்தில் தீவிரமாக குதித்துவிட்டது.. இதற்கு காரணம், இந்த ஒன்றரை வருட ஆட்சி காலத்தில் திமுக அரசு மீது பரவலான அதிருப்திகள் வெடித்து வருகின்றன.

 நொறுங்கும் கணக்கு

நொறுங்கும் கணக்கு

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாதது முதல் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் குற்றஞ்சாட்டியும் வரும்நிலையில், வரும் இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு வென்று, வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயமும் திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.. அதன்மூலம் மக்களின் நன்மதிப்பை முழுமையாக பெற்றுவிட முடியும் என்பதுடன், குறை சொல்லி வரும் எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் அந்த வெற்றி ஒரு பதிலடியாக இருக்கும் என்றும் கணக்கு போட வேண்டி உள்ளது..

 சீமான் வர்றார்

சீமான் வர்றார்

அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்த கட்சிகளும், அதாவது, பாஜக, எடப்பாடி, ஓபிஎஸ், சீமான், தினகரன், என அனைவருமே திமுகவையே தற்போது குறி வைத்து பிரச்சாரம் செய்ய போவதால், இதற்கெல்லாம் பதிலடிகளை தரவேண்டிய நெருக்கடியும் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், கூட்டணி என்றும் பாராமல், திமுகவே நேரடியாக களத்தில் குதித்து, தன் வெற்றியை பறிக்க மும்முரம் காட்ட தயாராகி உள்ளது.. சம்பந்தப்பட்ட இளங்கோவன் தொகுதியில் தற்சமயம் இல்லை என்றாலும்கூட, தோழமை கட்சிக்காக திமுக தலைவர்களே, பிரச்சாரத்திலும் இறங்கிவிட்டனர்.

 2 புள்ளிகள்

2 புள்ளிகள்

இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கிய தகவல் கசிந்துள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடாகி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் நேரு தலைமையில் 11 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் ஒவ்வொரு நாள் செலவுக்காக கணக்கிடப்பட்டு ஒரு வாரத்திற்கான செட்டில்மெண்ட் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் செலவுகளை அமைச்சர்கள் கேஎன் நேருவும், செந்தில்பாலாஜியும் கவனித்துக் கொள்கிறார்கள். வேட்பாளராக இளங்கோவனை காங்கிரஸ் அறிவித்தையடுத்து, ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றிருக்கிறார் இளங்கோவன்.. அப்போது, தேர்தல் செலவுக்கான பணம் தம்மிடம் இல்லை என்றும், காங்கிரஸ் மேலிடம் உதவினால்தான் உண்டு என்றும் ஸ்டாலினிடம் எதார்த்த நிலையை சொன்னாராம் இளங்கோவன்...

 ஹோப் ஸ்டாலின்

ஹோப் ஸ்டாலின்

அதற்கு ஸ்டாலின், "உங்கள் கட்சிக்காரர்களை கவனித்துக்கொள்ளும். தேர்தல் செலவுகளை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். திமுகவினருக்கான செலவுகளை அமைச்சர்கள் பார்த்துக் கொள்வார்கள். வாக்குகள் சேகரிப்பதில் கவனம் செலுத்துங்கள்" என்று சொல்லி இளங்கோவனுக்கு நம்பிக்கையை தந்தாராம் ஸ்டாலின். இந்த நிலையில்தான், திமுகவினருக்கான செலவினங்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை அமைச்சர்கள் இருவரிடமும் ஒப்படைத்துள்ளார் ஸ்டாலின். அவர்களும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள். இதனிடையே, நேரு, செந்தில்பாலாஜி இருவரிடமும் நேற்று இரவு தொடர்பு கொண்டு ஸ்டாலின் விவாதித்துள்ளதாக தெரிகிறது..

 இதான் சந்தோஷம்

இதான் சந்தோஷம்

அப்போது, "இடைத்தேர்தலின் வெற்றி காங்கிரசுக்கான வெற்றியாக யாரும் பார்க்க போவதில்லை. அது நம் கட்சிகான வெற்றியாகவும், நம் ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையாகவும் தான் பார்க்கப்படும். தொகுதியில் நாம் வெற்றிப்பெறுவோம் என்பதில் சந்தேகம் எனக்கில்லை. ஆனால், அது போதாது... எதிர்த்து நிற்கிற அதிமுக அணியும், மற்ற கட்சிகளும் டெபாசிட் போக வேண்டும். டெபாசிட் இழந்தால் தான் நான் சந்தோஷப்படுவேன்.. திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கிற எல்லோருக்கும் டெபாசிட் போக வேண்டும். அதற்கேற்ப தேர்தல் பணி செய்யுங்கள்'' என்று உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின். இந்த தகவலை தேர்தல் பணிக்குழுவில் உள்ள மற்ற அமைச்சர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பாஸ் செய்திருக்கிறார்கள் நேருவும் செந்தில்பாலாஜியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+