சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிதமான வேகத்தில் கொரோனா! தினமும் இருமுறை விசாரிக்கும் முதல்வர்! ராதாகிருஷ்ணன் கூறிய தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு 1.17 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது எனவும், கொரோனா தொற்றுப் பரவல் குறித்து நாள்தோறும் இருமுறை முதல்வர் விசாரிக்கிறார் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Recommended Video

    மிதமான வேகத்தில் கொரோனா! தினமும் இருமுறை விசாரிக்கும் முதல்வர்! - ராதாகிருஷ்ணன்

    சென்னை வேளச்சேரி குருநானக் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வணிகவியல் மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்," தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பது குறித்து ஆட்சியர்களுக்கு நேற்று அறிவுறுத்தப்பட்டது.

    ஏப்ரல் 15ம் தேதி தமிழகத்தில் 22 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை , நேற்று 144 ஆக பதிவாகியுள்ளது. சில நாட்கள் முன்பு Institutional cluster ஏற்பட்டது , மாணவர்களின் பயணங்களால் அது ஏற்பட்டது , முதலாமாண்டு மாணவர்களுக்கு கலாசார நிகழ்ச்சிகளாலும் பரவியது.

    மறுபடியுமா.. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு.. அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்மறுபடியுமா.. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு.. அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி கல்லூரியில் நேற்று 2 பேருக்கு தொற்று உறுதியானது, இன்று 29 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் கொரானா எண்ணிக்கை 200ஐ தாண்டும் நிலை ஏற்படும் .. தமிழகத்தில் குடும்பங்களுக்குள் க்ளஸ்டர் முறையில் கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் உருமாறிய ஒமைக்ரான் உள்வகையான பிஏ4 , பிஏ5 தமிழகத்தில் பரவியது.

    ஒமைக்ரான் வகை

    ஒமைக்ரான் வகை

    உருமாறிய கொரானாவில் டெல்டா போன்ற நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் தரும் செய்தி , ஆனால் வேகமாக பரவுகிறது. தொண்டை வலி அதிகரிக்கிறது , காய்ச்சல் ஏற்படுகிறது. இந்தியாவில் மீண்டும் உருமாறிய ஒமைக்ரான் உள்வகை பரவ தொடங்கியுள்ளது. எனவே மூடிய அறைகளுக்குள்ளும் முகக் கவசம் அவசியம் , தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 41 லட்சம் பேர் முதல் தவணையே செலுத்தவில்லை .

    பாதிப்பு ஏறுமுகம்

    பாதிப்பு ஏறுமுகம்

    அறிகுறி இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பரவல் இந்தியளவில் ஏறுமுகமாக உள்ளது , தமிழகத்தில் மிதமான வேகத்தில் அதிகரிப்பதும் உண்மை.. தமிழகத்தில் சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு கோவை ஆகிய 5 மாவட்டங்களில் நாள்தோறும் தொற்று பதிவாகிறது , 12 மாவட்டங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் தொற்று பதிவாகிறது.

    ஒத்துழைப்பு அவசியம்

    ஒத்துழைப்பு அவசியம்

    தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.. சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் தொற்று பரவியுள்ளது. மூன்று அலைகளை வென்றாலும் அரசுக்கு தப்போதையை சூழலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் . தென் ஆப்ரிக்க வல்லுநர்கள் கருத்துப்படி ஏற்கனவே கொரோனா ஏற்பட்டோருக்கும் உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படுவதாக கூறியுள்ளனர். தமிழகத்தில் 1.17 லட்சம் படுக்கைகள் சிகிச்சைக்காக தயாராக இருக்கிறது.தற்போது 55 பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கின்றனர், அதில் ஐசியூ 7 பேர் மட்டுமே , ஆக்சிஜன் சிகிச்சையில் 17 பேர் . தொற்று நிலவரம் குறித்து நாள்தோறும் இருமுறை விசாரிக்கிறார் முதலமைச்சர் " என பேசினார்.

    English summary
    Tamil Nadu People's Welfare Secretary Radhakrishnan has said that 1.17 lakh beds are being prepared for the treatment of corona infections in Tamil Nadu and that the Chief Minister stalin inquires about the spread of corona infections twice a day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X