எய்ட்ஸ்... படுக்கையில் 52 வயசு பெண்.. அப்பாவுக்கும் அதே எச்ஐவி.. எந்த மகனுக்கும் வரக் கூடாத நிலைமை
சென்னை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பொதுமக்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளார்கள் என்றாலும், ஆதரவற்ற சிறுவனுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.. என்ன நடந்தது உத்தர பிரதேச மாநிலத்தில்? யாரிந்த சிறுவன்.
உத்தர பிரதேசம் எட்டா மாவட்டத்தில் உள்ளது நாக்லா தீரஜ் என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டார்.. இதற்காக பல வருட காலம் சிகிச்சையும் பெற்று வந்தார்.

எய்ட்ஸ் பெண் - அப்பா - மகன்
ஆனால், கடந்த வருடம் இதே நோயினால் அவரது கணவர் திடீரென இறந்துவிட்டார்.. இதனால் தன்னுடைய ஒரே மகனுக்காக உயிரை கையில் பிடித்து கொண்டு, வீட்டிலேயே மருத்துவர்கள் சொன்னபடி, தீவிர சிகிச்சையை அந்த 52 வயது பெண் மேற்கொண்டு வந்தார்.. ஆனால் கடந்த நேற்று முன்தினம் அந்த பெண்ணும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்..
ஏற்கனவே அப்பாவை இழந்து, தற்போது அம்மாவையும் இழந்த 10 வயது சிறுவன், தன்னுடைய தாயின் சடலத்துடன் மாவட்ட தலைமையகத்திற்கு தனியாக வந்தான்.. மருத்துவமனையில் தாயின் சடலத்திற்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
அவனுக்கு தன்னுடைய தாய்-தந்தையர் என்ன நோயில் இறந்தார்கள் என்பதைகூட புரிந்து கொள்ள முடியவில்லை.. ஆனால் எய்ட்ஸ் என்ற நோய் தன்னுடைய பெற்றோரை தாக்கி கொன்றுவிட்டது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.,
ஸ்கூலுக்கு போகல
"எனது அப்பாவுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டபோதே, சொந்தக்காரர்களும், கிராமத்தினரும் எங்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.. இப்போது என்னுடைய அம்மாவையும் இழந்துவிட்டேன். அவரைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் என்னால் முடியவில்லை.
என் அப்பா இருக்கும்வரை ஸ்கூலுக்கு போனேன்.. அவர் இறந்த பிறகு போகவில்லை. என் அம்மாவை அனைவருமே ஒதுக்கி விட்டதால், நான் தான் அவரை பார்த்து கொண்டேன்.. இதற்காகவே ஸ்கூலுக்கும் போகவில்லை.. இப்போது என் அம்மாவும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க " என்று கதறி அழுதுகொண்டே சொன்னதை கேட்டு, அங்கிருந்தவர்கள் கலங்கி போய்விட்டார்கள்.
அழுதபடி இருந்த சிறுவன்
இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, உடனே விரைந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள், சிறுவனை தேற்றினார்கள்.. ஆனால் எவ்வளவோ முயன்றும், தாயின் உடலை விட்டு சிறுவன் நகரவே இல்லை... அதிகாரிகள் வரும்வரை தாயின் சடலம் பக்கத்திலேயே உட்கார்ந்து அழுதுகொண்டேயிருந்தான்..
பெண் இறந்த தகவலை கேள்விபட்டு ஒருசில தூரத்து உறவுகள் மட்டும் வந்திருந்த நிலையில், அவர்களை வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.. இறுதி சடங்கு நடக்கும்வரை 10 வயது சிறுவன் அழுது கொண்டேயிருந்தான்.
விழிப்புணர்வு அவசியம்
சிறுவன் மருத்துவமனையில் அழுது பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை கண்ணீர் சிந்த வைத்து வருகிறது.
எச்.ஐ.வி என்பது மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு வைரஸ் ஆகும். இதற்கு முறையான நிரந்தரத் தீர்வு இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், தொடர் சிகிச்சை மூலம் ஆயுளை நீட்டிக்க முடியும். ஆனால், இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சமூகம் ஒதுக்கி வைக்கும் அவலம் இன்றும் தொடர்வதுதான் கவலையை தந்து வருகிறது..
ஆதரவற்ற நிலையில் தவிக்கும் அந்த சிறுவனுக்கு அரசு உரிய பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications