சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் கொளுத்தும் வெயில், 24 மணிநேரமும் ஓடும் ஏசி.. அதிரவைக்கும் மின்சார தேவை

Google Oneindia Tamil News

சென்னை: மிக அதிகப்படியாக வெயில் கொளுத்தி வரும் சென்னையில் மின்சாரத்தின் தேவை 3400 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

நாள் தோறும் சென்னையில் தற்போது 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாண்டி வருவதால், சென்னை நகர மக்கள் ஏசி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை இரவு சென்னையில் மக்கள் அதிகபட்சமாக 3396 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளார்கள். கடந்த ஆண்டு கோடை வெயிலின் போது அதிகபட்சமாக 3537 மெகாவாட் மின்சாரம் என்ற அளவுக்கு காணப்பபட்டது,

அரவிந்த் ஜேகரிவால் மீதான தாக்குதல் முதல் முறையல்ல.. கன்னத்தில் அறைந்தவர் மிளகாய்ப் பொடியை வீசிய நபர்அரவிந்த் ஜேகரிவால் மீதான தாக்குதல் முதல் முறையல்ல.. கன்னத்தில் அறைந்தவர் மிளகாய்ப் பொடியை வீசிய நபர்

மின்தேவை அதிகரிப்பு

மின்தேவை அதிகரிப்பு

அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை ஆரம்பித்த நிலையில், கத்தரி வெயில் கொளுத்துவதால் மக்களின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மின்சார பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஏசி பயன்பாடு

ஏசி பயன்பாடு

கடந்த இரண்டு வாரங்களாக மின்சாரத்தின் பயன்பாடு உச்சபட்சமாக இருந்துவருகிறது. பொதுவாக மதியம் 1மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும். அப்போது மக்கள் வீடுகளிலோ அல்லது அலுவலங்களிலோ இருக்கும் போது ஏசியை முழுவீச்சில் பயன்படுத்துவார்கள்

உச்சபட்சமாக உயர்வு

உச்சபட்சமாக உயர்வு

தற்போது மாலையிலும் ஏசி பயன்படுத்துவதன் காரணமாக மின்சாரத்தின் பயன்பாடு இரவு 7.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை மிக அதிகமாக இருக்கிறது" என்றார்கள்

16151 மெகாவாட்

16151 மெகாவாட்

இதனிடையே மின்சாரத்தின் தேவை கடந்த ஏப்ரல் மாதத்தில் 3000 மெகாவாட்டையும் தாண்டியிருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் 16151 மெகாவாட் என்ற அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது.

English summary
The increased usage of air conditioners has pushed up power demand to 3400 MW in the chennai city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X