1 மணி நேரத்தில் செஞ்சுரி அடித்த மழை.. தலைமை செயலகத்திற்குள் புகுந்த தண்ணீர்.. அதிகாரிகள் வெளியேற்றம்
சென்னை: சென்னை கனமழை காரணமாக தலைமை செயலகத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கீழ் மட்ட அறைகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும், சென்னையிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படியே சென்னையிலும் பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 1 மணி நேரத்தில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடாமல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

கிளவுட் பர்ஸ்ட்
சென்னையில் பெய்து இருக்கும் இந்த மழைக்கு பின் கிளவுட் பர்ஸ்ட் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதாவது மேக வெடிப்பு. இந்த திடீர் மழை காரணமாக சென்னையின் சாலைகளில் பெரும் அளவில் மீண்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து உள்ளது.

சாலைகளில் தண்ணீர்
வடபழனி உள்ளிட்ட மெட்ரோ பணிகள் நடக்கும் பகுதிகள் மிக மோசமாக நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது. எழும்பூர், கிண்டி, சேத்துப்பட்டு, சென்ட்ரல், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழையால் தண்ணீர் தேங்கிக்கொண்ட வருகிறது. முக்கியமாக மெரினா அருகே சென்னையில் பல இடங்களில் இதுவரை 100 மிமீ மழை பதிவாகி இருக்கிறது.

இன்னும் அதிகம்
இன்னும் மழை நிற்காத காரணத்தால் இது 150 மிமீ அளவை தொடும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் சென்னை கனமழை காரணமாக தலைமை செயலகத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கீழ் மட்ட அறைகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

வெள்ளம்
அறைகளுக்குள் தண்ணீர் வந்ததால் அறைகளில் இருந்து அரசு ஊழியர்கள் வெளியேறி உள்ளனர். கீழ் மட்ட அறைகள் பலவற்றில் காலுக்கு மேலே தண்ணீர் புகுந்துள்ளது. மெரினா பெல்ட் முழுக்க 1 மணி நேரத்தில் 90 மிமீக்கும் அதிகமாக பெய்த மழையே இதற்கு காரணம்.

மழை அளவு
முக்கியமாக சென்னை எம்ஆர்சி நகரில் ஏற்கனவே 120 மிமீ மழை இதுவரை பெய்துள்ளது. இது 150 மிமீயை தாண்டும் வாய்ப்பும் உள்ளது. மெரினா பெல்ட்டில் பல இடங்களில் இதே அளவு பதியும் வாய்ப்பு உள்ளது. மீனம்பாக்கத்தில் 80 மிமீ மழை வரை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 25 மிமீ மழை வரை பெய்துள்ளது. விடாமல் கனமழை பெய்து வருகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications