சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழை.. வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் நேற்றைய தினம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

Heavy rain in Chennai last night

இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்தது. தற்போது காலையும் மழையும் பெய்தது.

சென்னையின் ஒரு சில பகுதிகளில் காலையும் மழை பெய்து வந்ததால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னை ராயப்பேட்டை, அண்ணாசாலை, கிண்டி, கோடம்பாக்கம், வேளச்சேரி , மாதவரம், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

அக்டோபர் மாதம் 4ஆவது வாரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+