சென்னையில் இரவில் கொட்டித்தீர்த்த மழை.. சூறைக்காற்று இடி-மின்னலுடன் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி சென்னையில் நேற்று இரவு சூறைக்காற்று, இடி மின்னலுடன் பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதியளவில் பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக ஆறுகளில் நீர் வரத்து உள்ளது.
இந்த மழையின் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு நீர் பிரச்சனை ஏற்படாது என்பதால் சென்னை உள்பட பெரும் நகர மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இந்நிலையில் தற்போதும் ஆங்காங்கே பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நேற்று முதல் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியிருந்தது.

கனமழைக்கு வாய்ப்பு
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எப்படி?
மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படாத நிலையில் சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில் தான் நேற்று இரவு சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்தது.

சென்னையில் இடி மின்னலுடன் மழை
சென்னை குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. சூளைமேடு, கோடம்பாக்கம் பகுதிகளில் லேசான மழை பெய்த நிலையில் குன்றத்தூர், சோமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மேலும் மதுரவாயல், வானகரம், போரூர் அதனை சுற்றிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சென்னையில் தற்போது மழையின்றி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் இரவில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications