நீலகிரியில் மிக கனமழை... 17ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மழை வெளுக்கப்போகுது

நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

Recommended Video

    6 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தாலும் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. கடலூரில் அதிகபட்சமாக 7 செமீ மழை பதிவாகியுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு கோபிச்செட்டிபாளையம், கன்னியாகுமரி, தொண்டியில் 3 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரைக்கும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    Heavy rain in Nilgiris thunder and lightning heavy rail till the 17th Oct

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

    நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை, திருச்சி,புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 18 மற்றும் 19ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிக பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    மத்திய கிழக்கு வங்கக் கடல் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

    மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா லட்சத்தீவு கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

    15 மற்றும் 16ஆம் தேதிகளில் குமரிக்கடல், மன்னார்வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+