ரூ.1,262 கோடி பணம் பறிமுதல்.. 4.18 தபால் வாக்குகள் பதிவாகி இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் பேட்டி!
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக கூறிய அர்ச்சனா பட்நாயக், தேர்தலுக்காக 1,06,418 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நாளை நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை எடுத்து செல்லும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

35 நாட்களாக அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நடந்து வந்த சூழலில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் அமைத்த பறக்கும் படை குழுக்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டது.
அதில் வாக்காளர்களுக்கு வழங்கவிருந்த ரூ.1,262 கோடி மதிப்பிலான பணம், மதுபானம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பணமாக மட்டும் ரூ.543 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச் சாவடிகளுக்கு 1,06,418 வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வரும் பணிகள் நடந்து வருகிறது.
தமிழ்நாடு முழுகதும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணிகளில் 1.47 லட்சம் காவலர்கள் மற்றும் மத்திய ஆயுதப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அதில் சென்னையில் மட்டும் சுமார் 24 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டிருக்கும் 5,938 இடங்களில் சிறப்பு பாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழ்நாடு முழுவதும் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 14.59 முதல்முறை வாக்காளர்கள் இருக்கின்றனர். அதேபோல் 325 வாக்குச்சாவடிகள் பெண்களில் நிர்வகிக்கப்பட உள்ளது. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications