ரொம்ப முக்கியம்.. தமிழ்நாட்டில் 3 மணி நேரத்திற்கு மழை பிச்சு எடுக்க போகிறது- வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணி வரை கனமழை பிச்சு எடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2 வாரமாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தீவிரம் எடுத்த மழை தினமும் பெய்து வருகிறது. அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
இன்னொரு பக்கம் தென்மேற்கு வங்க கடல் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற்று வருகிறது. இரண்டின் காரணமாகவும் தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்து வருகிறது.

சென்னை
கடந்த 2 வாரமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச், ரெட் அலர்ட் உள்ளிட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. தீபாவளி அன்று லேசாக குறைந்த மழை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மீண்டும் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கிறது.

எவ்வளவு?
நேற்று இரவு சென்னையில் மட்டும் 189 மிமீ மழை பெய்துள்ளது. திருச்சியில் 123 மிமீ மழை வரை பெய்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் 70 மிமீ மழை பெய்துள்ளது. புதுக்கோட்டையில் 62 மிமீ மழை பெய்துள்ளது. கோவையில் 7 மிமீ மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை
காலை 9 மணி வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோவை,திருப்பூர், ஈரோடு, கரூர், ,தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் 3 மணி நேரங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இடியுடன் கூடிய மழை
கடலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 9 மணி வரை தீவிர கனமழை பெய்து பின் படிப்படியாக மழை கொஞ்சம் குறையும். பின்னர் மாலைக்கு பின் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications