தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும் - வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும் என சென்னை வனிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், ஏனைய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நான்கு மாதங்களாக பல மாவட்டங்களில் அபரிமிதமாகவே பெய்துள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து விடும் அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும்.

வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக கடலோர மாவட்டங்கள், ஏனைய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை நகர், புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கடலூர் அண்ணாமலை நகர், சிதம்பரத்தில் தலா 13 செ.மீ,கொள்ளிடம் 11 செ.மீ., கொத்தவச்சேரி 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தென்தமிழகத்தில் குறைவாக பதிவாகும் என்று உலக வானிலை மையம் கணித்துள்ளது. வானிலை மையம். சுபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் லா நினா நிலவுவதாகவும் உலக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications