நீலகிரி, கோவையில் அதி கனமழை... இடி மின்னலுடன் வெளுத்து வாங்குமாம் - மண்சரிவுக்கும் வாய்ப்பு
தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் நீலகிரி, கோவையில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மண் சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 16 செமீ மழை பதிவாகியுள்ளது. நடுவட்டம், மேல்பவானியில் 14 செமீ மழையும், வால்பாறை, சின்னக்கல்லார், தேவாலா, பெரியாறு உள்ளிட்ட பல ஊர்களில் 10 செமீ மேல் மழை பதிவாகியுள்ளது. பல ஊர்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. அணையில் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

17 மாவட்டங்களில் கனமழை
தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்றைய தினம் தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி கோவையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையோரம்
நாளைய தினம் நீலகிரி, கோவையில் கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் மழை வெள்ளம்
25, 26,27ஆம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரியில் மழை நீடிக்கும். சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலோரம்
தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 27ஆம் தேதி வரைக்கும் அரபிக்கடலோர பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலோர பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications