5 மாவட்டங்களில் இடியோடு மிக கனமழை நீடிக்கும்... நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
5 மாவட்டங்களில் இடியோடு மிககனமழை நீடிக்கும்... நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக அதிக கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழ்நாடு கடற்கரையை ஒட்டிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் நேற்று அறிவித்திருந்த நிலையில் இரவு முதலே பல மாவட்டங்களில் மழை பெய்தது. இன்று காலை முதல் தமிழகத்தின் தலைநகர் சென்னை முதல் விருதுநகர் மாவட்டம் வரைக்கும் பலத்த மழை பெய்துள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. கோடம்பாக்கம் ,ஆவடி ,அம்பத்தூர் கேகே நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 45 நிமிடங்களில் 5 செமீ மழை பதிவாகி உள்ளதாகவும், புழல் பகுதியில் 8 செமீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென மதுராந்தகம், மேல்மருவத்தூர், ராமாபுரம், அச்சிறுபாக்கம், ஒரத்தி, ஆத்தூர், மற்றும் செய்யூர் சித்தாமூர் சூனாம்பேடு இடைக்கழிநாடு, படாளம் அதன் சுற்றுப்பகுதியில் கனமழை பெய்தது. மழையால் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
தொடர் மழையின் காரணமாக குளம் கண்மாய் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது.
கடலூர் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
அருப்புக்கோட்டையில் இன்று அதிகாலை முதலே அருப்புக்கோட்டை பாலையம்பட்டி, ஆத்திபட்டி , சொக்கலிங்கபுரம் , புளியம்பட்டி , ராமசாமிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. காலையில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை லாலாபேட்டை பணிக்கம்பட்டி மேட்டு மருதூர் தோகைமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.ஈ ரோடு மாவட்டத்தில் நள்ளிரவு முதல் ஈரோடு மொடக்குறிச்சி, ரங்கம்பாளையம், கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று அதிகாலை முதல் திருச்செங்கோடு குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சராப்பாளையம் உளுந்தூர்பேட்டை சின்னசேலம் தியாகதுருகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக அதிக கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு கடற்கரையை ஒட்டிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரைக்கும் தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 48 நேரத்திற்கு சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications