சென்னைக்கு சாரை சாரையாக படையெடுக்கும் வாகனங்கள்.. ஸ்தம்பித்து போன செங்கல்பட்டு! வாகன ஓட்டிகள் அவதி
சென்னை: கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் வெளி மாவட்டங்களில் இருந்து இன்று சென்னைக்கு அதிகம் பேர் புறப்படுவதால் அரசு பஸ், ஆம்னி பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் ஒரே நேரத்தில் பலர் கார், பைக்குகளிலும் சென்னைக்கு திரும்புவதால் செங்கல்பட்டு ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே இரவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இது மட்டுமின்றி இன்று வார விடுமுறை என்பதாலும் பணி நிமித்தமாக சென்னையில் தங்கி பணிபுரிந்து வரும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊர் சென்று விட்டும் இன்று இரவு மீண்டும் சென்னை நோக்கி செல்கின்றனர்.

குறிப்பாக நாளை பள்ளிகள் திறப்பதால் வெளி மாவட்டங்களுக்கு சென்ற மக்கள் கூட்டம் கூட்டமாக சென்னை நோக்கி படையெடுக்கிறார்கள். அரசு பஸ், ஆம்னி பஸ்கள், ரயில்கள், பைக்குகள், கார்கள், வேன்கள் என சாரை சாரையாக வாகனங்கள் சென்னை நோக்கி படையெடுக்கின்றன.
குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, குமரியில் இருந்து சென்னைக்கு அதிகளவில் மக்கள் செல்வதால், இன்று ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ரயில்களில் அன் ரிசர்வ்டு பெட்டியில் பயணிகள் ஏற முடியாமல் நின்றதையும் பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு கூட்டம் இருந்தது.
நெல்லை, கோவை, திருப்பூர் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்து இருந்தது. தமிழக அரசு சார்பில் வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை முடிந்து பயணிகள் சென்னை திரும்புவார்கள் என்பதால் 2,500 சிறப்பு பேருந்துகளை சென்னைக்கு இயக்கப்பட்டன. அதிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த நிலையில் ஒரே நாளில் அதிக வாகனங்களில் சென்னைக்கு மக்கள் படையெடுப்பதால் திருச்சி - சென்னை ஹைவேயில் வாகனங்கள் சாரை சாரையாக அணிவகுத்து வருகின்றன. சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் நின்று செல்லும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக செங்கல்பட்டு அருகே உள்ள சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒவ்வொரு வாகனங்களாக நின்று செல்ல நேரம் பிடித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.
அச்சரப்பாக்கம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கச்சாவடிகளில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு, வாகனங்கள் அப்படியே சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வகையில் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டன. கட்டாய கட்டண வசூல் தளர்த்தப்பட்டு வேகமாக வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டது.
இரவு 11 மணியளவிலேயே இவ்வளவு வாகங்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், நேரம் செல்ல செல்ல இன்னும் அதிக அளவில் வாகனங்கள் படையெடுக்கும் என்பதால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும், குறிப்பாக காலை நேரங்களில் சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்து உள்ளனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications