அண்ணாத்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள் வெளியிடுவதற்கு ஹைகோர்ட் தடை
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள அண்ணாத்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தை இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய கால கட்டத்தில் தியேட்டர்களில் படம் வெளியாகும் முன்பே ஆன்லைனில் வெளியாகி விடுகிறது. சினிமாவை திருட்டு தனமாக வெளியிடும் இணைய தளங்கள் புற்றீசல் போல பெருகி வருகின்றன. எங்கிருந்து படத்தை யார் ரிலீஸ் செய்கிறார்கள் என்று பலராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த பல ஆண்டு காலமாகவே இதுபோன்ற திருட்டு இணையதளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருட்டுத்தனமாக இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையில் தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தை இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது.இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப்படத்தில், நயன்தாரா , கீர்த்தி சுரேஷ் , குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகவும், இந்த படத்தை இதுபோன்ற வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால், சட்ட விரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில்
படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications