இந்தி திணிப்பால் தான் காங்கிரஸ் தமிழ்நாட்டில் காலியாச்சு.. பாஜகவுக்கும் அதே தான்! அமைச்சர் ஐபி சுளீர்!
திண்டுக்கல்: தமிழகத்தில் இந்தி திணிப்பை திணித்ததால் தான் காங்கிரஸ் சென்றது. அதேபோல் தற்பொழுது பிஜேபியும் திணித்தால் இந்தியாவை விட்டு சென்று விடும் எனவும், தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் பிஜேபியில் கூட்டணி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," 10 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி கல்வி கடனை ஏன் ரத்து செய்யவில்லை. மத்தியில் இருக்கும் மோடி அரசு கல்விக்கான நிதியை ஒதுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார்.
அனைத்து வாக்குறுதிகளும் மக்களிடையே வெறும் புஸ்வானம் தான். தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் பிஜேபியில் கூட்டணி வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மக்களின் தீர்மானம் மீண்டும் இரண்டாவதாக ஸ்டாலின் அரசு வரவேண்டும் என்பதே.

ஐ பெரியசாமி
எடப்பாடி பழனிசாமி பொருளாதார நிறுவனர் கிடையாது. வெற்று வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி வருகிறார். இந்திய மக்களின் மத்தியில் உள்ள நம்பிக்கையான குரல் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகும். கட்சிக்கு கூட்டணிக்கு வருவதும், அவர்களை முடிவு செய்வதும் தமிழக முதல்வர் கையில் தான் உள்ளது. திராவிட முன்னேற்ற கழக அரசை பொருத்தவரை சொன்னதை செய்யக்கூடிய அரசு செய்து காட்டியும் இருக்கிறது. சொல்லாததையும் செய்திருக்கின்ற அரசு திமுக அரசு என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
எடப்பாடி வாக்குறுதி
கடந்த காலங்களில் அது நிரூபணம் ஆயிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வாக்குறுதிகள் என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேர்தல் வருகிறது என்பதற்காக வாக்குறுதிகளை அள்ளி எறிவார்கள் .ஆனால் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியவர் தளபதி முதலமைச்சர் அவர்கள். நாங்கள் செய்த திட்டத்தை எல்லாம் அவர்கள்4 சிலிண்டர் தருவோம் என்று சொல்லுவார்கள். அது எல்லாம் பொய். அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை எதிர்க்கட்சியாக கூட வரப் போவதில்லை.
தேர்தல் வாக்குறுதி
வாக்குறுதி தானே சொல்லிவிட்டு போலாம் என்று நினைக்கிறார்கள். 2000 தருகிறோம் என்பதை மக்கள் நம்ப மாட்டார்கள். மக்கள் இதை நம்ப மாட்டார்கள். எதை சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். 70% அல்ல 100% மக்கள் நமது முதல்வர் மீது நம்பிக்கை இருக்கிறது. முதியோர் உதவித் தொகையை பொருத்தவரை 24 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கினோம். சுமார் ஒரு லட்சம் பேருக்கும் தமிழ்நாடு முழுவதும் முதியோர் உதவித் தொகை வழங்கி உள்ளோம்.
திமுக அரசு
அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை எல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள். அது ஏதோ விளம்பரத்திற்காக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லாம் பொய் அவர்கள் ஆட்சிக் காலத்தில் எதுவுமே மக்களுக்கு எந்த நன்மைகளையும் செய்ததில்லை. அடித்தட்டு மக்களுக்கு 50 ஆண்டு காலங்களுக்குப் பின்பு இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்கி உள்ளோம். ஏன் அவர்கள் ஆண்ட பத்து ஆண்டு காலத்தில் இந்த பட்டாக்களை வழங்கி இருக்க வேண்டியதுதானே. அவர்கள் மக்களுக்கான அரசு அல்ல. அதிமுக முடிந்து போன கதை இனி அது வரவே வராது.
திமுக கூட்டணி
வீடு இல்லாதவர்களுக்கு வீடு கலைஞரின் கனவு இல்லமாக இருந்தாலும் 7 லட்சம் வீடுகள் கொடுத்து அது கட்டி முடிக்கப்பட்டு இப்போதும் ஒரு லட்சம் வீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொடுத்துக் கொண்டு உள்ளோம். இன்னும் ஒரு லட்சம் வீடுகள் கொடுக்க உள்ளோம். ஆக மொத்தம் இரண்டு ஆண்டுகளில் மூன்று லட்சம் வீடுகள் மக்களை சென்று அடையப் போகிறது. எட்டு லட்சம் வீடுகள் எங்களோடது குறிக்கோள். ஏற்கனவே எங்களது கூட்டணி தொடர்கிறது. எந்தக் கூட்டணியிலும் இல்லாத அளவிற்கு ஒன்பது ஆண்டு காலமாக ஒரே கூட்டணியில் தொடருகின்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழக தலைமையில் உள்ள கூட்டணி" என்றார்.












Click it and Unblock the Notifications