நக்சல் பெருமை பேசும் விடுதலை திரைப்பட குழு மீது 'உபா' சட்டம் பாய வேண்டும்.. அர்ஜூன் சம்பத்
சென்னை: "நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது "உபா"சட்டம் பாய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தி உள்ளார். மேலும் இன்று தமிழகத்தில் தினக்கூலிகளாக பணியாற்ற இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நக்சல்வாதத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களை சார்ந்தவர்கள் தான் என்றும் அர்ஜூன் சம்பத் சுட்டிக்காட்டி உள்ளார்.
இது தொடர்பாக அர்ஜூன் சம்பத் கூறியிருப்பதாவது: நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது "உபா" பாய வேண்டும்

முக்கியமாக அதை வெளியிட்டிருக்கின்ற ரெட் ஜெயன்ட்ஸ் மீது ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இத்திரைப்படத்தின் மீது தேசிய புலனாய்வு முகாமை (என்.ஐ.ஏ) கவனம் செலுத்த வேண்டும்.
காவல்துறையின் விசாரணை காவல் கொடுமைகளை அம்பலப்படுத்தும் மறைவில் நக்சல்வாதத்தையும் கௌரவப்படுத்துகிறார் திரைப்படத்தின் இயக்குனர். திரையரங்கை பிரச்சார மேடையாக மாற்றி... தமிழக இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதிகளை கதாநாயகன் ஆக்குகிறார்.
பெருமாளின் பயங்கரவாதத்தினால் அம்மாவட்டங்கள் அடைந்த பின்னடைவு ஏராளம்; பாரதத்தின் அடுத்த ரெட் காரிடாராக தமிழகத்தை மாற்ற துடிக்கும் சக்திகளை... திமுக ஊக்குவிப்பது அம்பலமாகிறது. நக்சல்வாதத்தின் கொடுமைகளை கிழக்கு மாநிலங்களின் அவல நிலையை கண்டு தமிழகம் பாடம் கற்கட்டும். சாலைகள் போடுவதை எதிர்த்து போராடும் அனைவரும் அயோக்கியர்களே... திரையரங்கில் கைதட்டி விசிலடித்து இத்திரைப்படத்தை கொண்டாடும் அனைத்து இளைஞர்களும் நக்சல் வாதத்தினால் பின்னடைவை சந்தித்த மாநிலங்களை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும்.
இன்று தமிழகத்தில் தினக்கூலிகளாக பணியாற்ற இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நக்சல்வாதத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களை சார்ந்தவர்கள் தான். அவர்களிடம் நீங்கள் பேசும் புரட்சியை கூறி பாருங்கள்... வாயில் மட்டுமல்ல எல்லாவற்றின் மூலமாகவும் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள். இவ்வாறு அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இடதுசாரி தமிழ்த் தேசியம்- விடுதலை படம்- பின்னணி என்ன?
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தீவிர கம்யூனிஸ்டுகள் (தீ.கம்யூனிஸ்டுகள்) என்ற ஒரு அத்தியாயம் இருந்தது. சிபிஐ, சிபிஎம் கட்சி போல மார்க்சிய- லெனினிய சித்தாந்தத்தை அதிதீவிரமாக, ஆயுத வழியில் பேசியவர்கள் தீ.கம்யூனிஸ்டுகள். மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி கிராமத்தில் சாருமஜூம்தாரால் கட்டமைக்கப்பட்ட அதிதீவிர ஆயுதப் போராட்ட வழிமுறையை ஏற்றுக் கொண்டவர்கள் இவர்கள். இந்த பாதையின் அடுத்த கட்டமாக இடதுசாரி தமிழ்த் தேசியம் நோக்கி இவர்களில் ஒரு பகுதியினர் நகர்ந்தனர். அப்படி நகர்ந்தவர்களில் புலவர் கலியபெருமாள், தமிழ்நாடு விடுதலைப் படை தமிழரசன் உள்ளிட்டோர் முதன்மையானவர்கள். புலவர் கலியபெருமாளை பற்றி பேசுகிறது விடுதலை திரைப்படம். புலவரும் தமிழரசனும் முன்வைத்த இடதுசாரி தமிழ்த் தேசியத்தை விவரிக்கிறது விடுதலை படத்தின் இரு பாகங்களும். அதனால் இடதுசாரி தமிழ்த் தேசியத்தினரால் இந்த படம் கொண்டாடப்படுகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications