மெடிக்கல் மிராக்கிள்.. அமைச்சர் சேகர்பாபுவிற்கு அதிமுக செல்லூர் ராஜு ஆதரவு.. அண்ணாமலைக்கு குட்டு
சென்னை: அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். பாஜக ஆட்சிக்கு வரும் நாள் இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்குமே தவிர தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது என்றார். எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது என்று கூறிய சேகர்பாபு, அண்ணாமலை போன்றவர்களுக்கு அதிகாரத்தை மக்கள் அளிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? என்று கேட்ட செல்லூர் ராஜூ, அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றார். பெரிய கோவில்களின் வருவாயில்தான் சிறிய கோவில்கள் செயல்படுகின்றன இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து தெரிவித்துள்ள செல்லூர் ராஜூ, யார் யாரோ ஆட்சிக்கு வர போகிறோம் என சொல்லும்போது விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை என்றார். 2026ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications