திருவள்ளுவர், அம்பேத்கர், தலித்துகளை இழிவாக பேசிய பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது- 14 நாள் ஜெயில்!
சென்னை: திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர் (தலித்துகள்) உள்ளிட்டோரை இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவரும் இந்துத்துவா சொற்பொழிவாளருமான ஆர்பிவிஎஸ் மணியனை சென்னை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்துத்துவா அமைப்புகளின் தலைவர் பதவி உள்ளிட்டவைகளை வகித்து தற்போது இந்துத்துவ சித்தாந்தங்களை பரப்புகிற சொற்பொழிவாளராக வலம் வருகிறவர் ஆர்பிவிஎஸ் மணியன். கடந்த சில நாட்களாக ஆர்பிவிஎஸ் மணியன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில், பறையர் எவனாவது பள்ளர்ல கல்யாணம் முடிப்பானா? நீங்க எல்லாம் அடிச்சுட்டு நிற்கிறவனுக..
அந்த அம்பேத்கர்தான் கான்ஸ்டிடியூசனை கொடுத்தார்னு பல பேரு எழுதிகிட்டு இருக்கானுக.. பேசிகிட்டு இருக்கானுக.. இப்ப இருக்கிற ஆட்சிக்காரனும் இதையே சொல்லிகிட்டு இருக்கானுங்க..துதி பாடிகிட்டு இருக்கானுக.
அம்பேத்கர் கிளார்க்: அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும். அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவன், டைப் அடிச்சவன், டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன்.. அதான் அம்பேத்கர். அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கலை. கிராமங்களில் அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருக்கிறாங்க என்பான்.. அங்கிட்டு துலுக்கனுக இருக்காங்க என்பான்.. இங்கிட்டு காலனி ஆட்கள்னு சொல்லுவான். அவனுக்கு பேரு கூட கிடையாது.. காலனி ஆட்கள். எந்த காலனியில் எவன் ஒட்டிகிட்டு வந்தான்னு எனக்கும் தெரியாது. அவனுக எல்லாம் ஷெட்யூல்டு கேஸ்ட்னு சொல்றம்ல அவனுக.

திருவள்ளுவர்: எவனோ ஒருத்தன் திருவள்ளுவர், திருக்குறள்னு சொல்லிப்புட்டான்.. திருவள்ளுவர்னு ஒரு ஆளே கிடையாது. அந்த ஆளு ஒருத்தர் இருந்தார்னு சொல்றது கற்பனை.. அதைவிட அந்த ஆள் திருக்குறளை எழுதினார்னு சொல்றது நல்ல கற்பனை என மிக இழிவாக பேசியிருந்தார். இப்பேச்சுக்காக ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டது. போலீசாரிடமும் புகார் மனு கொடுக்கப்பட்டது.
கைது- சிறை: இதனையடுத்து அம்பேத்கரை இழிவாகப் பேசியதற்காக சென்னையில் உள்ள மாம்பலம் வீட்டில் இன்று காலை ஆர்பிவிஎஸ் மணியனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் மணியன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார் ஆர்பிவிஎஸ் மணியன்,
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications