தர்மபுரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை: தர்மபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தர்மபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இன்றும் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
இதேபோல் தர்மபுரி, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தர்மபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சதீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு மட்டும் நாளை 23 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.
இலவச உதவி எண்கள்
இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி பள்ளி வேலை நாளாக செயல்படும். அதே நேரத்தில் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திற்கு இலவச உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படும் மக்கள், 1077, 04342 - 231077, 04342- 231500 மற்றும் 04342 - 230067 ஆகிய எண்களில் இலவசமாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்
இன்று ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
விழுப்புரம். கள்ளக்குறிச்சி கடலூர், ஈரோடு, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை 23 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்
24 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 25 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications