ஆர்பிஐ வட்டி குறைப்பு.. உங்கள் வீட்டுக் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றி லட்சக்கணக்கில் சேமிப்பது எப்படி
சென்னை: ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும்போது, ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியவர்கள் தங்கள் கடனை 'மறுநிதியளிப்பு' அல்லது 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தைச் சேமிக்க முடியும். ஒரு சிறிய வட்டி விகிதக் குறைப்பு கூட நீண்ட கால அடிப்படையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது உங்களுக்கு எப்படி லட்சக்கணக்கில் லாபத்தைத் தரும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம்.
நிறைய பேர் வீட்டுக்கடன் கிடைக்கிறதே என்ற ஆசையில் வட்டி விகிதம் பற்றியோ, தவணை காலம் பற்றியோ மற்றும் பிற கட்டணங்கள் பற்றியோ கவலைப்படாமல் பில்டர் ஏற்பாடு செய்த வீட்டுக்கடனை கண்ணை மூடிக்கொண்டு வாங்கி விடுகிறார்கள். ஆனால் இதில் தனியார் வங்கியில் வாங்கும் வீட்டுக்கடனுக்கு வட்டி மிக அதிகம்.

அதேநேரம் எஸ்பிஐ, எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி குறைவு. எனவே வீட்டுக்கடன் தனியாரில் வாங்கியவர்கள் எஸ்பிஐ, எல்ஐசி போன்ற பொதுத்துறை வாங்கிகளில் வீட்டுக் கடனை மாற்றுவது ஹோம் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்பர் என்று அழைக்கப்படுகிறது. இது வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி சற்று விரிவாக, உதாரணத்துடன் பார்ப்போம்.
வீட்டுக் கடன் மறுநிதியளிப்பு என்றால் என்ன?
Refinancing என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் வீட்டுக் கடன் மறுநிதியளிப்பு என்பது, உங்களின் தற்போதைய வீட்டுக் கடனை, குறைந்த வட்டி விகிதம் வழங்கும் மற்றொரு வங்கிக்கு மாற்றுவதையே 'மறுநிதியளிப்பு' என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் மாதத் தவணை குறையும் அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் கணிசமாக குறைந்துவிடும்.
இது உங்களுக்கு எப்படி லட்சக்கணக்கில் லாபத்தைத் தரும்?
ஒரு சிறிய வட்டி விகிதக் குறைப்பு கூட நீண்ட கால அடிப்படையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் தனியார் வங்கியில் 9.5 சதவீத வட்டியில் வாங்கியிருப்பீர்கள், அதேநேரம் பொதுத்துறை வங்கியில் மாற்றினால் 8 சதவீததிற்கே கிடைக்கும். இதன் மூலம் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
உதாரணமாக: நீங்கள் ₹50 லட்சம் கடனை 20 ஆண்டுகளுக்கு 9% வட்டியில் வாங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் எஸ்பிஐ, எல்ஐசி போன்ற பொத்துறை நிதி நிறுவனங்களுக்கு மாற்றும் போது, வட்டி விகித 8% ஆக குறையும் வாய்ப்பு உள்ளது. அப்படி குறைந்தால்:
பழைய இஎம்ஐ: ₹44,986
புதிய இஎம்ஐ: ₹41,822
மாதச் சேமிப்பு: ₹3,164
மொத்த வட்டிச் சேமிப்பு (20 ஆண்டுகளில்): சுமார் ₹7.5 லட்சம் முதல் ₹8 லட்சம் வரை சேமிக்க முடீயும்.
நீங்கள் கவனிக்க வேண்டிய 4 முக்கியமான விஷயங்கள்:
வட்டி விகித வித்தியாசம்: உங்கள் தற்போதைய வட்டிக்கும், புதிய வட்டிக்கும் இடையே குறைந்தது 0.50% முதல் 1% வரை வித்தியாசம் இருந்தால் மட்டுமே இப்படி ஹோம் லோனை மாற்றுவது லாபகரமானதாக இருக்கும்.
மாற்றுக் கட்டணங்கள்
புதிய வங்கியில் கடனை மாற்றும்போது 'Processing Fee', 'Legal charges' போன்ற சில கட்டணங்கள் இருக்கும். இந்தச் செலவுகளை விட உங்கள் வட்டிச் சேமிப்பு அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
கடனின் மீதமுள்ள காலம்
உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் (உதாரணமாக 10+ ஆண்டுகள்) இருந்தால் மட்டுமே இது அதிக லாபம் தரும். கடனை முடிக்க இன்னும் 2-3 ஆண்டுகளே இருந்தால், மாற்றுவது பெரிய பலனை உங்களுக்கு தராது.
அபராதக் கட்டணம் இல்லை
தற்போது பிளோட்டிங் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு, கடனை அடைக்க அல்லது பிற வங்கிகளில் மாற்ற எந்த அபராதமும் (Foreclosure charges) விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன
முதலில் உங்கள் தற்போதைய வங்கியிடமே பேசி, வட்டி விகிதத்தைக் குறைக்கச் சொல்லுங்கள் (இதற்கு 'Conversion Fee' என்ற சிறிய கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பின்னர் மற்ற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களையும், அங்குள்ள இதர கட்டணங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். புதிய வங்கிக்கு மாறும்போது ஆகும் மொத்தச் செலவு எவ்வளவு, அதன் மூலம் மிஞ்சும் வட்டி எவ்வளவு என்பதைத் தெளிவாகக் கணக்கிடுங்கள்.
அதன்பின்னர் லாபகரமாக இருந்தால் தாரளமாக முடிவெடுங்கள். அவசரப்பட்டு தனியார் அதிக வட்டிக்கு வீட்டுக்கடன் வாங்கிவிட்டோமே என்று புலம்புவோருந்து இந்த வசதி வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் உங்கள் சிபில் நன்றாக இருந்தால் தான் பொதுத்துறை வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் தரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications