ஓவர் நைட்டில் பணக்காரர்? 100 கோடி சம்பாதிப்பது ரொம்பவே ஈஸி.! இதை செய்யுங்க போதும்- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: பெருந்தொகையைச் சம்பாதித்து விரைவாகப் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதை எப்படி நனவாக்க முடியும் என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
சினிமாவில் வருவது போலச் சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். அனைவராலும் செய்ய முடிவதில்லை. தவறான திட்டமிடல், தேவையில்லாத கடன், ஆடம்பர செலவுகளே இதற்குக் காரணமாகும்.

இதனால் தான் லட்சங்களில் சம்பளம் வாங்குவோர் கூட மாத இறுதியில் எப்படி அந்த ஒரு வாரத்தை ஓட்டுவது என யோசிக்கிறார்கள். இதை நாம் நமது நண்பர்கள் வட்டாரத்திலேயே கூட அதிகமாகப் பார்க்க முடியும். இவர்கள் வயதான பிறகு இன்னுமே கஷ்டப்படவே செய்வார்கள்.
ஆனந்த் சீனிவாசன்: அதற்கு முக்கிய காரணமே இவர்கள் சேமிக்காமல் இருப்பது தான். இந்த சேமிப்பு குறித்துத் தொடர்ந்து பேசி வருபவர் ஆனந்த் சீனிவாசன். சேமிப்பு குறித்தும் முதலீடுகள் குறித்தும் இவர் பேசிய பல வீடியோக்கள் டிரெண்டிங்கில் வந்துள்ளன. இவர் சொல்வது எல்லாம் ரொம்பவே எளிமையானது தான். தேவையில்லாத செலவுகளைச் செய்யக் கூடாது. வருமானத்தில் ஒரு பகுதியை நிச்சயம் சேமிக்க வேண்டும். இது படிக்க ஈஸியாக இருந்தாலும் செயல்படுத்துவது கடினம்தான்.
இதற்கிடையே அவர் தனது புதிய வீடியோவில், "என்னால் 100 கோடி ரூபாயைச் சம்பாதிக்க முடியுமா என்று பலருக்கும் கேள்வி இருக்கும். அதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் வாரன் பப்பட் மாடலை பின்பற்றலாம். அதாவது பங்குச் சந்தை. ஆனால், நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்தால் மட்டுமே இது சரியாக இருக்கும்.
100 கோடி ரூபாய்: பங்குச் சந்தையைப் பொறுத்தவரை 99% லாபம் என்பது 50 வயதுக்கு பிறகே கிடைக்கும். அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். ஆனால், 50 வயதுக்குப் பிறகு சொத்து மதிப்பு பல மடங்கு வேகமாக வளரும். முதல் 50 ஆண்டுகள் கற்றுக்கொள்ள அடுத்த 50 அதைச் செயல்படுத்த என நாம் பிரித்துக் கொள்ளலாம்.
தற்போதைய காலத்தில் முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் குறைந்தது 70 முதல் 85 வயது வரை வாழலாம். அப்படி இருக்கும் போது இளைஞராக இருக்கும் போது இருந்து சரியாக முதலீடு செய்ய வேண்டும். அந்த முதலீடுகளில் இருந்து வரும் லாபத்தை மீண்டும் முதலீடு செய்தால் எளிதாக ரூ 100 கோடியை மிக எளிமையாக சம்பாதிக்கலாம். இது ஒரு வழி
அடுத்த வழி: இதில் மற்றொரு வழியும் இருக்கிறது. அதாவது ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றை நீங்கள் ஆரம்பிக்கலாம். உங்களுக்கு ஒரு மிகச் சிறந்த ஐடியா இருந்து.. அதை வெற்றிகரமாக நடத்தி லாபகரமானதாக ஆக்க முடிந்தால் அந்த வழியிலும் 100 கோடி சம்பாதிக்கலாம். எந்த வழியில் சேகரிக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முதலீடு செய்ய வேண்டும். சேமிக்கும் போது செய்யும் போது தொடக்கத்தில் சற்று கடினமாகத் தான் இருக்கும்..
ஆனால், சில ஆண்டுகள் தொடர்ந்து சேமித்து, அதைச் சரியாக முதலீடு செய்தால் அதுவே நமக்குப் பழக்கமாகிவிடும். அதேபோல பெரிய தொகையைத் தான் சேமித்து முதலீடு செய்ய வேண்டும் என்று இல்லை. உங்களால் முடிந்த தொகையைச் சேமித்து முதலீடு செய்ததாலே போதும்" என்று அவர் கூறினார்..
அதாவது ஓவர் நைட்டில் பணக்காரர் ஆவது எல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும்.. முறையாக சேமித்தால் மட்டுமே பணக்காரர் ஆக முடியும் என்பதையே அவர் கூறுகிறார். இது பொதுவான செய்தி மட்டுமே.. இதை யாரும் பொருளாதார ஆலோசனையாகக் கருதக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications