தட்டி தூக்கிய திண்டுக்கல் சீனிவாசன்! இழந்த பதவியை மீட்டது எப்படி! எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்!
சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவால் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கும் அதிரடி முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்சியின் பொருளாளராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் பொருளாளர் பதவியை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கைப்பற்றியுள்ளார். பதவி பறிபோன நிலையில் மீண்டும் அதே பதவியை அவர் கைப்பற்றியது எப்படி?
பல்வேறு தடைகள் எதிர்ப்புகள் அரசியல் காய் நகர்த்தர்கள் என சாதுர்யமாக செயல்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொது செயலாளர் ஆக தற்போது பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்..
மேலும் கட்சியில் தனக்கு எதிராக இருந்த ஓ பன்னீர்செல்வத்தையும் முற்றிலுமாக ஓரம் கட்டும் வகையில் தனது ஆதரவாளர்கள் துணையோடு ஒருங்கிணைப்பாளர்,பொருளாளர் பதவியை பறித்ததோடு பதவி ஏன் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
தன்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தாலும் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் ஓபிஎஸ் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதை பொறுத்து அமையும். ஆனாலும் ஜெயலலிதாவின் வலது கரம் போல சுமார் 30 ஆண்டுகள் அரசியல் களத்தில் பணியாற்றி வந்த ஓ பன்னீர்செல்வம் தற்போது அதே கட்சியினரால் தூக்கி எறியப்பட்டு இருக்கிறார் இதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமியின் சாதுரியமான செயல்பாடுகளும் அரசியல் காய் நகர்த்தலும் தான் காரணம் என்கின்றனர் அதிமுக மூத்த நிர்வாகிகள்.

பொருளாளர் பதவி
அதே நேரத்தில் பலத்த எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் ஏற்படுத்திய பொருளாளர் பதவியை கைப்பற்ற போவது யார் என்ற கேள்விக்கும்படி கிடைத்திருக்கிறது எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்தவரும் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவருமான திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே பொருளாளர் பதவி குறித்த விவாதங்கள் எழுந்த போது திண்டுக்கல் சீனிவாசனின் பெயர் அதில் இடம்பெற்று இருந்தது. சி.வி சண்முகம் ஜெயக்குமார், கேபி முனுசாமி ஆகியோர் பொருளாளர் பதவியை கைப்பற்ற தீவிரம் காட்டிய நிலையில் ஏற்கனவே பொருளாளராக இருந்தவர் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற முன்னணி காரணங்களின் அடிப்படையில் பொருளாளர் பதவி அவருக்கு கிடைத்துள்ளது.

டிடிவி தினகரன் தலையீடு
ஏற்கனவே அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்த சீனிவாசன் சில குற்றச்சாட்டுகள் காரணமாக அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பொருளாளர் பதவி வகித்த போதே தொடர்ந்து பல ஆண்டுகள் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றியவர் அதன் பின்னர் டிடிவி தினகரன் தலையீடு காரணமாக பொருளாளர் பதவியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் நீக்கப்பட்டார். அதன் பின்னர் திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதன் எழுச்சியின் காரணமாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வனவாசத்தை அனுபவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு
அதன் பிறகு 2016 சட்டமன்ற தேர்தலில் சசிகலா தரப்பு ஆதரவு காரணமாக மீண்டும் திண்டுக்கல் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் வனத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தனது அதிரடி செயல்பாடுகளால் நத்தம் விசுவநாதன் ஆதரவாளர்களை ஓரங்கட்டிய அவர் தர்மயுத்தத்தின் போது எடப்பாடி தரப்பில் நின்றார் தொடர்ந்து கூட்டணி முடிவு எடுப்பது முதல் பேச்சாளர் வேட்பாளர் தேர்வு எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்டவற்றில் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக தன்னை காட்டிக்கொண்டார்.

பொருளாளர் பதவி
ஓபிஎஸ் விவகாரத்தில் பொருளாளர் பதவியை கைப்பற்றிய தீர வேண்டும் என முன்னணியில் இருந்தார் அப்போது ஏற்பட்ட சில சறுக்கல்கள் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மீது அதிருப்தியில் இருந்தாலும் ஓபிஎஸ் முக்குலத்தோர் அமைப்பைச் சேர்ந்தவர், திண்டுக்கல் சீமிவாசனும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படை காரணங்களோடு ஏற்கனவே பொருளாளர் பதவியும் வகித்தவர் என்பதால் தற்போது பொருளாளர் பதவி அவரை சென்று சேர்ந்திருக்கிறது.
-
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications