மொத்தம் 48 வீடு.. சுதீஷ் மனைவி பூர்ண ஜோதியை நம்ப வைத்து ஏமாற்றிய கும்பல்.. சென்னையில் என்ன நடந்தது?
சென்னை: தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம், வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனரான சுதீஷ் தேமுதிக துணை பொதுச்செயலாளராக உள்ளார். இவர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் உள்ளது. அரசியலை தாண்டி சுதீஷ் குடும்பம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறது..

இந்நிலையில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டித்தருவதாக லேகா சர்மா பில்டர்ஸ் நிறுவனத்தின் சந்தோஷ் சர்மா, சாகர் ஆகிய இரண்டு பேர் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். ஆனால் ஒப்பந்தப்படி கட்டிய வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை வேறு ஒருவருக்கு விற்று ரூ.43 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டார்களாம். இது தொடர்பாக சுதீஷின் மனைவி பூர்ண ஜோதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் இந்த மோசடி சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள், தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டித்தருவதாக லேகா சர்மா பில்டர்ஸ் நிறுவனத்தின் சந்தோஷ் சர்மா, சாகர் ஆகிய இரண்டு பேரும் 43 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் இரண்டு பேர் 43 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications