Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குன்றத்தூர் "அலமேலு".. ரூமில் திடீர்னு அலறல்.. போலீசுக்கு ஓடிய கணவன்.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே

குன்றத்தூரில் மனைவியை கொன்றவர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்தேகம் ஓவராகி, மனைவியை கடப்பாறையாலேயே அடித்து கொன்றுள்ளார் கணவர்.. இது சம்பந்தமாக குன்றத்தூர் போலீசாரிடம் வாக்குமூலமும் தந்துள்ளார்.

குன்றத்தூர் அடுத்த கலெடிபேட்டை, அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்.. 45 வயதாகிறது.. ஒரு தனியார் கிளப்பில் வேலை செய்து வந்தார்.

மனைவி பெயர் அலமேலு.. 42 வயதாகிறது.. இவர் ஒரு ஸ்கூல் டீச்சர்.. ஆனால், கொஞ்ச நாட்களாகவே வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

 குன்றத்தூர் அலமேலு

குன்றத்தூர் அலமேலு

இவர்களுக்கு மோனிஷா, வசுந்தரா என்று 2 மகள்கள் இருக்கிறார்கள்.. இருவருமே காலேஜ் படிக்கிறார்கள்.. சம்பவத்தன்று வழக்கம்போல் மகள்கள் காலேஜுக்கு சென்று விட்டனர்... ரமேஷூம், அலமேலும் மட்டும் வீட்டில் இருந்தனர்.. பிறகு, மதியம் திடீரென அலமேலு அலறல் சத்தம் கேட்டது.. இதனால் அக்கம்பக்கத்தினர் பதறியடித்து கொண்டு ஓடினர்.. ஆனால், கதவு உள்ளே சாத்தியிருந்தது.. தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர்.

போஸ்ட்மார்ட்டம்

போஸ்ட்மார்ட்டம்

ஆனால், அதற்குள் ரமேஷ் திடுதிப்பென்று கதவை திறந்து கொண்டு, வேகமாக ஓடிவிட்டார்.. பிறகு, அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அலமேலு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியாகினர்.. உடனே குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் விரைந்து வந்து, அலமேலு சடலத்தை மீட்டு போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. வழக்கு பதிவு செய்து, எகிறி குதித்து தப்பிய ரமேஷை தேட ஆரம்பித்தனர்.. மனைவி மீது சந்தேகம் இருந்ததால், அவரை அடித்து கொன்றதாக, முதலில் தகவல் வெளியானது..

வாக்குமூலம்

வாக்குமூலம்

இதனிடையே, ரமேஷ், போலீஸ் ஸ்டேஷனில் தானாகவே வந்து சரணடைந்தார். அப்போது போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு தகவல்களை சொன்னார்.. கல்யாணம் ஆனதில் இருந்தே அலமேலு மீது ரமேசுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.. இது தொடர்பாக அடிக்கடி கணவன், மனைவிக்குள் தகராறும் நடந்து வந்துள்ளது.. எப்போது சண்டை நடந்தாலும், கோபித்துக் கொண்டு, அலமேலு, அயனாவரத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிடுவாராம்.. பின்னாடியே சென்று, அலமேலுவை சமாதானப்படுத்தி தன்னுடய வீட்டிற்கு அழைத்து வருவாராம் ரமேஷ்..

சமாதானம்

சமாதானம்

அப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பும் இவர்களுக்குள் தகராறு வெடித்து, அலமேலுவும் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.. பிறகு, சமாதானம் செய்து தன் வீட்டிற்கு ரமேஷூம் அழைத்து வந்துவிட்டார்.. ஆனால், வீட்டிற்குள் நுழைந்த உடனேயே மறுபடியும் தகராறு நடந்துள்ளது.. அப்போதுதான் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கடப்பாறை எடுத்து மனைவியின் தலையில் அடித்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார்.. இப்போது கைது செய்யப்பட்டுள்ள ரமேஷிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+