"கவனிச்சீங்களா".. அண்ணாமலையும் "அவங்களும்" ஒரே மாதிரி பேசறாங்களே.. போட்டு தாக்கிய கே. பாலகிருஷ்ணன்
பாஜக வெற்றி குறித்து சிபிஎம் பாலகிருஷ்ணன் பேட்டி தந்துள்ளார்
சென்னை: நேற்றைய தினம் 5 மாநில தேர்தலில், பெருவாரியான பாஜக பெற்ற வெற்றி குறித்து சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
பாஜக என்ற பெயரை கேட்டாலே டென்ஷனாகிவிடுவார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்...
பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதே முதல் வேலை என்று விடாமல் சொல்லி கொண்டே இருப்பார். பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டுக்கு எப்போதுமே ஆபத்து என்று எச்சரிக்கை செய்து கொண்டே இருப்பார்..

கணிப்புகள்
அதிமுகவை இடதுசாரிகளோ, திமுகவோ, காங்கிரஸ் கட்சியோ அழிக்கப் போவதில்லை.. அந்த கட்சியுடன் வைத்துள்ள பாஜகவே அழித்துவிடும்... ஏன் என்றால், இதுதான் பிற மாநிலங்களில் நடந்து வருகிறது என்பதை அதிமுகவினர் உணர வேண்டும்'' என்று அதிமுகவுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தியவரும் இவரேதான். இந்நிலையில், நேற்றைய தினம் 5 மாநில தேர்தல் ரிசல்ட் வெளியானது.. எப்படியும் உபியில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுவிடும் என்று உறுதியாக கணிக்கப்பட்ட நிலையில், பாஜக வென்றுவிட்டது..

பேட்டி
மற்ற மாநிலங்களில் ஏதாவது இரண்டில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தால் பாஜகவே அங்கும் வென்றுவிட்டது.. இதில் முன்கூட்டியே எதிர்பார்த்து, தேர்தல் கணிப்புகளின்படி வெற்றி பெற்றது பஞ்சாப்பின் ஆம் ஆத்மிதான். இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும் மகிழ்ச்சியாக பேட்டி தந்தார் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை..

தேர்தல்
"ஒரு நாள் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமையும். அது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடத்தப்படுமா இல்லை 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்படுமா என தெரியவில்லை" என்று ஆரூடம் சொல்லி இருந்தார்.. இந்த கூற்றை இவ்வளவு நாள் எடப்பாடி பழனிசாமி மட்டுமே ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசி வந்த நிலையில், அண்ணாமலையும் இதையே கூறியுள்ளார்.

அண்ணாமலை
பாஜகவின் நேற்றைய தின வெற்றிக்கும், அண்ணாமலையின் இந்த பேச்சுக்கும்தான் பாலகிருஷ்ணன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.. அவர் சொன்னதாவது: "வெற்றி பெற்ற மாநிலங்களில், தமிழ்நாட்டைபோல எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இருந்து ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை. அதனால், பாஜகவின் அதிருப்தி ஓட்டுகள், பல கூறுகளாக பிரிந்ததால் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தவிர வேறொரு முக்கிய காரணம் எதுவுமில்லை. பாஜகவிற்கு கிடைத்த வெற்றி என்பது அபரிமிதமான வெற்றி என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

எதிர்க்கட்சிகள்
பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்... வெற்றிப் பெற்ற மாநிலங்களில், தமிழ்நாட்டைப் போல எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இருந்து ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை. அதனால், பாஜகவின் அதிருப்தி ஓட்டுகள், பல கூறுகளாக பிரிந்ததால் பாஜக வெற்றி பெற்றுள்ளது.பாஜகவின் அதிருப்தி ஓட்டுகளை எதிரணியினர் ஒன்று சேர்க்க தவறி விட்டனர். இதைத்தவிர வேறொரு முக்கிய காரணம் எதுவுமில்லை..

எம்எல்ஏக்கள்
ஏற்கனவே பல மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை நாடு பார்த்து கொண்டுதான் இருந்தது... தோற்ற இடங்களில் எல்லாம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தான் ஆட்சிக்கு வந்தனர். ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி தோற்பதும், மற்றொரு கட்சி வெற்றி பெறுவதும் சூழ்நிலையை பொறுத்தது. இதனால் பாஜகவுக்கே ஏகோபித்த ஆதரவு உள்ளது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று தேர்தல் ஆணையர் கூறியிருப்பது பாஜகவை திருப்திப்படுத்த கூறியிருக்கலாம்..

பகல் கனவு
மற்றபடி அதையெல்லாம் கொண்டுவர முடியாது... அதேபோல், தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை 2024 ஒரே தேர்தல் வரும் என சொல்வதும், தேர்தல் ஆணையம் அவ்வாறு சொல்வதும் ஏன் என்று தெரியவில்லை... நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்படபடவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் செய்யாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் வாய்ப்புமில்லை.. ஒரே நாடு ஒரே தேர்தல் நாங்கள் அடுத்த முறை ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று பகல் கனவு" என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications