சென்னை வடபழனி நட்சத்திர ஓட்டலில் ரூ.23 கோடி வைரம் கொள்ளை திட்டம் அரங்கேறியது எப்படி?
சென்னை: சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நகை வியாபாரியை கட்டிப்போட்டு ரூ.23 கோடி மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்து காரில் தப்பிய 4 பேர் கொண்ட கும்பலை அடுத்த 12 மணி நேரத்தில் தூத்துக்குடியில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். ரூ.23 கோடி வைரம் கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியது எப்படி என்பது குறித்து கைதான விஜய் என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுபற்றி வெளியான தகவல்களை பார்ப்போம்.
சென்னையில் வைர வியாபாரி சந்திரசேகர் என்பவர் வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். அப்போது நகை வாங்குவது போன்று வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரது அறைக்கு சென்றனர். பின்னர் அவரது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு ரூ.23 கோடி மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

12 மணி நேரத்தில் கைது
வைர நகையை கொள்ளை அடிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட 4 பேர் கொண்ட கும்பல் அடுத்த 12 மணி நேரத்தில் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர். இந்த கொள்ளை திட்டம் எப்படி அரங்கேறியது என்பதை கைதான விஜய் என்பவர் போலீசில் அளித்த தகவல்களை பார்ப்போம்.
பெரிய கமிஷன்
சென்னை அண்ணா நகரில் வசிக்கும் சந்திரசேகர் என்ற வைர வியாபாரியிடம் விலை மதிப்புள்ள பழங்கால வைரக்கல் ஒன்று இருப்பதாக கடந்த வாரம் என்னுடைய நண்பர் ராகுல் என்பவர் கூறினார். மேலும் அந்த வைரத்தை அவர் விற்பனை செய்ய உள்ளதாகவும், விற்பனை செய்துக் கொடுத்தால் பெரிய அளவில் கமிஷன் தொகை கிடைக்கும் என்றும் நண்பர் ராகுல் கூறினார்.
வைரக்கல்
ராகுல் கூறியதன் பேரில் எனது நண்பர்களான ஜான் லாயட் என்பவரையும், ரதிஷ் என்பவரையும் அழைத்துக் கொண்டு வைர வியாபாரி சந்திரசேகர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு, வைர வியாபாரி சந்திரசேகரும், அவரது மகள் ஜானகியும் இருந்தார்கள். விற்பனைக்கான வைரக்கல்லை, எங்களிடம் காட்டினார்கள்.
எப்படி கிடைத்தது
இந்த வைரக்கல் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்றும், இதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என்றும் சந்திரசேகரிடம் நாங்கள் அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், மதுரையை சேர்ந்த அவருடைய நண்பர் மாசாணம் என்பவர் இந்த வைரக்கல்லை கொடுத்து விற்று தருமாறு கூறியதாக எங்களிடம் தெரிவித்தார்.
23 கோடி விலை போகும்
மேலும் குறிப்பிட்ட வைரக்கல் கடந்த 3 மாதங்களாக தங்களிடம் இருப்பதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் இல்லை என்றும் சந்திரசேகர் தெரிவித்தார். மேலும் அந்த வைரக்கல், மிகவும் பழமையானது என்பதால் சர்வதேச மார்க்கெட்டில் ரூ.23 கோடிக்கு விலை போகும் என்றும் வைர வியாபாரி சந்திரசேகர் எங்களிடம் கூறினார்.
1 கோடி தான் போகும்
அந்த வைரக்கல்லை புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இது எவ்வளவு விலை போகும் என்று நிபுணர்களிடம் கேட்டறிந்துவிட்டு, உங்களை வந்து சந்திப்பதாக சந்திரசேகரிடம் கூறிவிட்டு சென்றோம். ஆனால், அந்த வைரக்கல்லின் புகைப்படத்தை, சில நகை வியாபாரிகளிடம் காண்பித்து அது எவ்வளவுக்கு விலை போகும் என்று விசாரித்தோம், அது ரூ.1 கோடி வரை விலை போகும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர். பின்னர், கடந்த 3-ம் தேதி மீண்டும் சந்திரசேகர் வீட்டிற்கு சென்றிருந்தோம்
90 லட்சம் தர விரும்பினோம்
வைர வியாபாரி சந்திரசேகரிடம், நீங்கள் வைத்திருக்கும் வைரக்கல் ரூ.1 கோடிக்கு தான் விலை போகும் என பிரபல வைர வியாபாரிகள் கூறுகிறார்கள். எனவே, ரூ.90 லட்சம் வரை தருகிறோம் என்றும், மீதி ரூ.10 லட்சம் எங்களுக்கு கமிஷனாக தர வேண்டும் என்றும், சந்திரசேகரிடம் நாங்கள் தெரிவித்தோம். ஆனால், சந்திரசேகர் எனது நண்பர் சொன்னபடி ரூ.23 கோடி பணம் தந்தால் வைரத்தை தர தயாராக இருக்கிறேன், ரூ.90 லட்சத்துக்கு எல்லாம் வைரத்தை தர முடியாது என்று எங்களிடம் திட்டவட்டமாக கூறினார்.
வடபழனி நட்சத்திர ஓட்டல்
இதையடுத்து குறிப்பிட்ட வைரத்தை எடுத்துக் கொண்டு வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வரும்படி நாங்கள் சந்திரசேகரிடம் கூறினோம்., அங்கு வைத்து வைரத்தின் விலையை இறுதி செய்து கொள்ளலாம் என்றும் கூறினோம். இதன்படி கடந்த மே 4ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று, பகல் 11 மணியளவில் சந்திரசேகர் சென்னை வடபழனியில் நாங்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். அவருடன் அவரது மகள் ஜானகியும், அவரது நண்பர் சுப்பிரமணியமும் வந்தார்கள்.
அட்வான்ஸ் பணம்
நாங்கள் அப்போது ஜானகியை ஓட்டலுக்கு வெளியே காத்திருக்கும்படி கூறினோம். தற்போது வைர வியாபாரி சந்திரசேகரிடம் ரூ.90 லட்சத்தை அட்வான்சாக தருகிறோம் என்றும், வைரக்கல்லை எங்களிடம் கொடுங்கள், அதை அரபு நாடுகளில் வசிக்கும் தொழிலதிபர்களிடம் பேசி ரூ.23 கோடிக்கு விற்பனை செய்து தருகிறோம் என்றும் தங்களுக்கு தெரிந்த பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களிடம் பேசலாம் என்றும் நாங்கள் கூறினோம்.
கொள்ளை அடிக்க முடிவு
அதேநேரம் சந்திசேகரின் கையில் உள்ள வைரத்துக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால், அதை கொள்ளையடித்து செல்ல நானும் எனது நண்பர்களும் சதி திட்டம் தீட்டினோம். எனது நண்பர்கள் ஜான் லாயட், ரதிஷ், அருண் பாண்டியராஜன் ஆகியோரும் எனக்கு துணையாக நின்றார்கள்.
வாயில் பிளாஸ்திரி
சந்திரசேகருடன் வந்திருந்த சுப்பிரமணியத்தை அட்வான்ஸ் தொகை ரூ.90 லட்சத்தை அருகில் உள்ள இன்னொரு நட்சத்திர ஓட்டலில் வைத்து தருகிறோம் என்று அழைத்துச் சென்றோம். அங்குள்ள ஓட்டல் ஒன்றில், அவரை நிற்க வைத்துவிட்டு, நாங்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் அறையில் சந்திரசேகர் வாயில் பிளாஸ்திரி ஒட்டி கட்டிப்போட்டோம்.
தூத்துக்குடியில் கைது
பின்னர் வைரக்கல்லை எடுத்துக் கொண்டு, தப்பிச்சென்றோம். வெளியில் தயாராக இருந்த அருண்பாண்டியராஜனுக்கு சொந்தமான காரில் ஏறி, தூத்துக்குடிக்கு சென்றோம். அங்குள்ள நண்பர் ஒருவர் மூலம் வைரக்கல்லை, விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், தூத்துக்குடியில் வைத்து போலீசார் எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு விஜய் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
முன்னதாக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று காலையில் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் சிப்காட் போலீஸ் நிலையத்தில் இருந்த கொள்ளை கும்பல், கொள்ளையடிக்கப்பட்ட வைரம் மற்றும் தப்பிக்க பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறார்கள். அவர்களை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications