சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாமே விசிக மேட்டர்தான்.. இப்படி பண்ணிட்டாங்களே! திமுகவிற்கு வந்த "தர்மசங்கடம்".. நேரம் சரியில்லை!

Google Oneindia Tamil News

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற இரண்டு விஷயங்கள் ஆளும் திமுகவிற்கும், அதன் கூட்டணி கட்சியான விசிகவிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த விவகாரத்தை திமுக, விசிக எப்படி அணுக போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

சமீபத்தில் தமிழ்நாட்டில் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச பல்லக்கு நிகழ்வு சர்ச்சையானது. இந்த நிகழ்விற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஹீரோக்கள் அல்ல.. இறந்தவர்களும் தமிழர்கள்தானே.. கார்த்தி சிதம்பரம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஹீரோக்கள் அல்ல.. இறந்தவர்களும் தமிழர்கள்தானே.. கார்த்தி சிதம்பரம்

இவர்கள் சார்பாக ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட, மயிலாடுதுறை கோட்டாச்சியர் பாலாஜி தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச பல்லக்கு நிகழ்விற்கு அவர் தடை விதித்தார்.

விசிக கடுமையாக எதிர்ப்பு

விசிக கடுமையாக எதிர்ப்பு

பல்லக்கில் மனிதர்களை தூக்குவது மனித உரிமை மீறல். இது அடிமைத்தனத்தின் அடையாளம் என்று விசிக இதை கடுமையாக விமர்சனம் செய்தது. ஆனால் விசிக எதிர்ப்பிற்கு இடையில் இந்த பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு ஆளும் திமுக அனுமதி அளித்தது. ஆதீனங்கள் கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்பை அடுத்து இந்த நிகழ்விற்கு அரசு மூலம் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதே இதனால் விசிக தரப்பு அப்செட் ஆகலாம் என்று கூறப்பட்டது.

2020ல் என்ன நடந்தது?

2020ல் என்ன நடந்தது?

ஏனென்றால் 2020ல் அதிமுக ஆட்சியின் போதே போராட்டத்தின் மூலம் ஆதீன பட்டின பிரவேசத்தை விசிக தடுத்து நிறுத்தியது. ஆனால் இப்போது அவர்கள் கூட்டணியில் இருக்கும் திமுகதான் ஆட்சியில் இருக்கிறது. ஆனால் இப்போது அவர்களால் இந்த நிகழ்வை தடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் விசிகவினர் இடையே எழுந்துள்ளதாம். விசிகவின் டாப் தலைகள் இதை வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், இப்படி அனுமதி கொடுத்துட்டாங்களே என்று மற்ற நிர்வாகிகள் இந்த முடிவால் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

பீப் பிரியாணி

பீப் பிரியாணி

திமுகவிற்கு கொஞ்சம் தர்மசங்கடத்தை இது ஏற்படுத்தி இருக்கும். இந்த விவகாரம் முடிவதற்குள் பீப் தடை விவகாரம் எழுந்துள்ளது. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆம்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. ஆனால் இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி இங்கு மாட்டுக்கறி தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 பீப் விவகாரம் விசிக எதிர்ப்பு

பீப் விவகாரம் விசிக எதிர்ப்பு

பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியும் இடம்பெற வேண்டும். இந்த தடையை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் நாங்களே திருவிழா நடக்கும் பகுதிக்கு எதிரே மாட்டிறைச்சி பிரியாணி வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வோம் என்று விசிக தெரிவித்துள்ளது. இதில் அரசு இன்னும் நேரடி நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சியில், ஆட்சியர் ஒருவர் இப்படி தடை போடுவதுதான் விசிகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அடுத்தடுத்த கருத்து மாறுபாடு

அடுத்தடுத்த கருத்து மாறுபாடு

இப்படி அடுத்தடுத்து இரண்டு விவரங்களில் திமுக - விசிக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். நிர்வாகியை ஜாதி சொல்லி திட்டியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முந்தைய சம்பவம்

முந்தைய சம்பவம்

இந்த விவகாரத்தில் விசிக கொதிப்பில் இருந்தது. இருந்தாலும் உடனே அமைச்சரவையை மாற்றி திமுக அந்த விவகாரத்தை சிறப்பாக கையாண்டது. ஆனால் பல்லக்கு விவகாரத்திலும், பீப் விவகாரத்திலும் ஆளும் திமுக விசிகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை. பல்லக்கு நிகழ்விற்கு இந்த வருடம் மட்டுமே அனுமதி, அடுத்த வருடம் அனுமதி இல்லை என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தாலும், விசிக இதை எப்படி எடுத்துக்கொள்ளும் என்று கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    #BREAKING ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
    ஆனால் நிலை என்ன?

    ஆனால் நிலை என்ன?


    விசிக அடிமட்ட நிர்வாகிகள் இதனால் அதிருப்தியில் இருந்தாலும் டாப் நிர்வாகிகள் பெரிதாக இதை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அரசுக்கு இருக்க கூடிய பிரஷர் குறித்து தெரியும். அவர்கள் எடுத்த முடிவை எங்களுக்கு எதிரான முடிவாக கருதவில்லை என்று விசிகவின் டாப் நிர்வாகிகள் நினைக்கிறார்களாம். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்பதால்தான் நேற்று விசிக தலைவர் எம்பி திருமாவளவனும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பு நன்றாகவே அமைந்து இருந்தது என்கிறார்கள் விசிக வட்டாரத்தினர்.

    English summary
    How did Two instances create a small tussle in the VCK vs DMK relationship. சமீபத்தில் நடைபெற்ற இரண்டு விஷயங்கள் ஆளும் திமுகவிற்கும், அதன் கூட்டணி கட்சியான விசிகவிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X