25 வருட பந்தம் க்ளோஸ்! மகன் ஜெயபிரதீப்பை வைத்து ஓபிஎஸ் செய்த "சம்பவம்".. ஆடிய எடப்பாடி! செம ஆபரேஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் நேற்று எடப்பாடி பழனிசாமி கேம்பில் இருந்து ஓ பன்னீர்செல்வம் கேம்பிற்கு திடீரென தாவினார்.

ஆர்.பி.உதயக்குமாரோடு 25 ஆண்டுகாலம் பயணித்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன், ஓபிஎஸ் அணிக்குத் தாவியிருக்கிறார். அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்ததில் இருந்தே வரிசையாக நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் தாவ தொடங்கி உள்ளனர்.

சமீபத்தில் ஓ பன்னீர்செல்வத்தை ராஜ்ய சபா எம்பி தர்மர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் நடிகர் பாக்யராஜ் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

எடப்பாடியின் கோட்டையாக விளங்கும் மேற்கு மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் பக்கம் சென்றார். இவர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர். திண்டுக்கல் சீனிவாசன் பக்கம் இருந்தவர் தற்போது ஓபிஎஸ் பக்கம் சென்றுள்ளார். எடப்பாடி சட்ட ரீதியாக பலமாக இல்லை என்று பலர் இப்படி தாவ தொடங்கி உள்ளனர். இன்னும் பலர் வரும் நாட்களில் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐயப்பன்

ஐயப்பன்

இதன் ஒரு கட்டமாகவே உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன், ஓபிஎஸ் அணிக்குத் தாவியிருக்கிறார். ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பிடம் தான் இந்த அசைண்மென்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெய பிரதீப் மூலமே ஐயப்பன் ஓ பன்னீர்செல்வம் பக்கம் வந்துள்ளார் என்கிறார்கள். ஐயப்பனை 3 முறை ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார் ஜெயபிரதீப். கடந்த சில வாரங்களில் இந்த சந்திப்புகள் அடுத்தடுத்து நடந்து உள்ளன.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி

போன் மூலமும் ஜெய பிரதீப் ஐயப்பனிடம் அடிக்கடி பேசி இருக்கிறார். அந்த சந்திப்பில், நிறைய அரசியல் ரகசியங்களை விவரித்து ஐயப்பனை தங்கள் பக்கம் வர சம்மதிக்க வைத்தாராம் ஓபிஎஸ் மகன். அரசியல் ரீதியாக ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் பலம், அவருக்கு இருக்கும் டெல்லி சப்போர்ட், சட்ட ரீதியாக அவருக்கு உள்ள பலம் என்று பல விஷயங்களை பேசி இருக்கிறாராம். இதை எல்லாம் கேட்டு இவ்வளவு விஷயம் இருக்கா என்று மலைத்து போய் ஓபிஎஸ் பக்கம் ஐயப்பன் தாவி உள்ளார்.

ஜெய பிரதீப்

ஜெய பிரதீப்

இந்த நிலையில், ஐயப்பன் செயலால் ஆர்.பி உதயகுமார் செம அப்செட் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ஐயப்பன் வளர முக்கியமான காரணமாக இருந்தவர் ஆர்.பி உதயகுமார். ஐயப்பன் தேர்தலில் வெற்றிபெறவும் ஆர் .பி உதயகுமார் முக்கிய காரணமாக இருந்தார் ஐயப்பனுடன் ஆர்.பி உதயகுமார் மிக நெருக்கமாக இருந்தார். இப்படிப்பட்ட நபர் ஓபிஎஸ் பக்கம் சென்றதால் உதயகுமார் செம அப்செட்டில் இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+